August 3, 2017 தண்டோரா குழு
குஜராத் மாநிலங்களவை தேர்தலில் நோட்டாவை அறிமுகம் செய்ய தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குஜராத்தில் மூன்று மாநிலங்களவை எம்.பி.,க்களுக்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி நடக்கவிருக்கிறது. இந்நிலையில் குஜராத் மாநிலங்களவை தேர்தலில் நோட்டா இடம் பெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
குஜராத் மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகாவுக்கு சாதகமாக நடந்து கொள்வதை தடுக்கும் வகையிலும்,மாநிலங்களவை தேர்தலில் நோட்டாவுக்கு வாக்களிக்கும் எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ”நோட்டா முறை ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது. திடீரென தற்போது மட்டும் ஏன் காங்கிரஸ் கட்சி இதனை எதிர்க்கிறது. நோட்டாவுக்கு தடை கிடையாது” என்று இன்று தீர்ப்பளித்தது.