• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நோயாளிகளின் நம்பிக்கையை பெற்ற மிராக்கிள் வெல்னஸ் கிளினிக் !

March 11, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில், சக்தி குழும நிறுவனங்களின் கீழ் செயல்படுகின்ற மிராக்கிள் வெல்னஸ் கிளினிக்கில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் தங்களது சொந்த கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மிராக்கிள் வெல்லனஸ் கிளினிக் என்ற மருத்துவமனையில் அறுவை சிகிச்சை இல்லாமல் அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் மருத்துவ முறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையை கடந்த 2018 ம் ஆண்டு துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு துவக்கி வைத்தார்.

இம்மருத்துவமனை பொதுமக்களுக்கு தேவையான அனைத்து விதமான, சிகிச்சை முறைகளை,அலோபதி மருத்துவம், சித்த மருத்துவம்,என அனைத்தையும் வழங்கி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக இங்கு சித்த மருத்துவ சிகிச்சை முறைகளை எடுத்து கொண்ட நோயாளிகள் பல்வேறு நோயினால் பாதிக்கபட்டு,இங்கு சிகிச்சை எடுத்து கொண்டு, தற்போது நன்கு குனமடைந்துள்ளனர். அவர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகளையும் குணமடைந்த மகிழ்ச்சிகளையும் இன்று செய்தியாளர்களிடம் தெரவித்தனர்.

அப்பொழுது பேசிய சக்தி குழுமங்களின் தலைவர், மற்றும் நிர்வாக இயக்குனர் மாணிக்கம், மற்றும் மருத்துவர்
அருள்,

பல்வேறு நோயினால் பாதிக்கபட்ட நோயாளிகளுக்கு பொள்ளாச்சி மகாலிங்கம் கல்லூரியில்,சிகிச்சை மையமாக செயல்படுத்தி, 2018 ம் ஆண்டு முதலாக செயல்பட்டு வருகின்றது.இங்கு,மனித உடலில் ஏற்படும், இதய நோய்கள்,புற்றுநோய், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு,ஒவ்வாமை,போன்ற பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

மைட்டோகாண்டிரியா என்ற உயிரணுக்களுக்கு ஊட்டம் அளித்து நோய்களுக்கு சிகிச்சை வழங்குவதன் மூலம் அறுவை சிகிச்சை இல்லாமல் நோய்களை குணப்படுத்த முடியும்.
அலோபதி,ஹோமியோபதி, சித்தா, மற்றும் இயற்கை மருத்துவம் என அனைத்து முறைகளிலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பட்டு வருகிறது.நோயாளிகளின் உடல் எந்த மருத்துவத்தை விரைவில் ஏற்று கொள்கின்றதோ,அந்த மருத்துவத்தை உடனுக்குடன் வழங்குவதால்,நோயாளிகள் விரைவில் குணமடைந்து செல்வதாக தெரிவித்தனர்.இதுவரை 2000 க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பட்டு அனைவரும் தற்போது நல்ல முறையில் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும் கல்லீரல் நோயினால் பாதிக்கபட்டு சிகிச்சை பெற்ற நோயாளி பாலா கூறும்பொழுது,

பல்வேறு தனியார் மருத்துவமனையில் ஆங்கில மருத்துவத்தை எடுத்து வந்த நிலையில், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தான் மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் இதனை தொடர்ந்து பல்வேறு இடர்பாடுகளை தாண்டி இந்த மருத்துவமனைக்கு வந்ததாகவும், அங்கு நம்பிக்கை இன்றி மருத்துவம் எடுத்து கொண்டேன் ஆனால், மருத்துவம் எடுத்து கொண்ட ஒரு வாரத்தில் மீண்டும் எனது கல்லீரல் கொஞ்சம் கொஞ்சமாக செயல்பட ஆரம்பித்தது.

இதனை நானே உணர்ந்தேன் இதனை தொடர்ந்து நான் நம்பிக்கையுடன் மீண்டும் மருத்துவம் எடுத்துக் கொண்டேன் எடுத்து கொண்ட சில வாரங்களில், எனது கல்லீரல் மீண்டும் பழைய நிலைக்கு திருப்பியுள்ளது. அனைத்து பணிகளையும் நானே செய்கின்றேன் என்னால் முடிகின்றது என்று தெரவித்துள்ளார்.

மேலும் படிக்க