• Download mobile app
29 Nov 2024, FridayEdition - 3215
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பங்களாதேஷில் இந்துக்கள் தாக்கப்பட்டு வருவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் – டாக்டர் கிருஷ்ணசாமி அறிவிப்பு !

October 20, 2021 தண்டோரா குழு

பங்களாதேஷில் இந்துக்கள் தாக்கப்பட்டு வருவதை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வரும் 27 ஆம் தேதி புதியதமிழகம் கட்சியின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெரும் என கோவையில் டாக்டர் கிருஷ்ணசாமி பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

மேலும் இதுகுறித்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில்,

பங்களாதேஷ் உள்ளிட்ட அண்டைநாடுகளில், இந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. துர்க்காபூஜை நாடுமுழுவதும் சிறப்பாக இந்து மக்கள் கொண்ட்டாடினார்கள். அதுபோல் அண்டை நாடான பங்களாதேஷில் துர்க்கா பூஜையில் ஈடுபட்டுவந்த இந்துக்கள் மீதும், இந்து ஆலயங்கள்மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது.

1947 ஆண்டு வரை இந்தியாவின் அங்கமாக இருந்து, பல பிரச்சினைகளுக்கு பிறகு தனிநாடாக அறிவிக்கப்பட்டது. பங்களாதேஷ்
கடந்த 60 வருடங்களுக்கு மேலாக பங்களாதேஷில் இந்துக்கள் மீது தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த பத்து நாட்களாக பெரும்பாலான இந்து வழிபாட்டு தளங்கள், குடியிருப்புகள் மீது தொடர் தாக்குதல் நடைபெற்று வருகிறது.

அதுபோல் இலங்கையில் 2009, மற்றும் 2010, ஆண்டுகளுக்கு பிறகு இந்து கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளது. 28 சதவிகிதம் இருந்த இந்துமக்கள் தொகை இன்று இலங்கையில் வெகுவாக குறைந்துள்ளது.பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், உள்ளிட்ட நாடுகளில் இந்துக்களின் கோவில்கள் மீதும், இந்துக்களின் மீதும் தொடர்ந்து நடைபெறும் தாக்குதலை கண்டித்து சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் ,27 ஆம் தேதி கண்டன ஆர்பாட்டத்தை புதிய தமிழகம் கட்சி நடத்த திட்டமிடுள்ளது.

இதில் புதிய தமிழகம் கட்சியின் ஒத்த கருத்துடன் உள்ள கட்சிகள் அனைவரும் கலந்துகொள்ளலாம்.எந்த மதசாயமும் வரக்கூடாது என்பதற்காகதான், இந்த ஆர்பாட்டத்தில் ஒத்த கருத்துடைய எல்லா கட்சிகளும், அமைப்புகளும் கலந்துகொள்ளலாம் என்று அனைவரையும் அழைப்பதாக தெரிவித்தார்.

பங்களாதேஷில் ஆயிரமாண்டுகளாக வாழ்ந்துவந்த மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது. இதில் இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்லவேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க