• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பசியால் ரூபாய் நோட்டுக்களை தின்ற ஆடு

June 7, 2017 தண்டோரா குழு

உ.பியில் விவசாயி தனது சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த பணத்தை வீட்டின் செல்லப்பிராணி ஆடு மென்று தின்ற விவகாரம் நடந்துள்ளது.

உத்தரபிரதேஷ் மாநிலத்தின் கன்னோஜ் மாவட்டதிலுள்ள சிலுவாப்பூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி சர்வேஸ் குமார் பால்.இவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். அவர்கள் வீட்டில் செல்லப்பிராணியான ஆடு ஒன்றும் இருந்தது.

சர்வேஸ் குமார் வீட்டில் கட்டடப் பணி நடந்துக்கொண்டு இருந்தது. செங்கல் வாங்குவதற்காக தனது சட்டைப்பையில் 66,௦௦௦ ரூபாய் வைத்திருந்தார். அந்த பணம் அனைத்தும் 2௦௦௦ ரூபாய் நோட்டுகளாக இருந்துள்ளது.

ஆடு எதையோ வாயில் வைத்து மென்று தின்பதை கவனித்த சர்வேஸ் குமார், சத்தம் எழுப்பியுள்ளார். அதன் வாயிலிருந்து இரண்டு 2௦௦௦ ரூபாய் தான் காப்பாற்ற முடிந்தது, அதுவும் சேதமடைந்த நிலையில் தான் இருந்தது.

இது குறித்து சர்வேஸ் குமார் பால் கூறுகையில்,

“நான் குளிக்க சென்றபோது,பணத்தை என்னுடைய சட்டை பையில் வைத்திருந்தேன். காகிதங்களை விரும்பி தின்னும் எங்கள் ஆடு, சட்டை பையில் வைத்திருந்த ரூபாய் நோட்டுக்களை தின்றுக்கொண்டிருந்தது. அதன் வாயிலிருந்து இரண்டு 2௦௦௦ ரூபாய் நோட்டுக்களை தான் சேதமடைந்த நிலையில் மீட்க முடிந்தது. ஆனால் என்ன செய்வது, இந்த ஆடு எனக்கு குழந்தை போன்றது.

ஆட்டை கால்நடை மருத்துவரிடம் அழைத்து சென்று, ஏதேனும் மருந்து வாங்கி கொடுத்தால், அதை சாப்பிட்டு வாந்தி எடுக்கும்போது, மற்ற பணத்தை திரும்ப பெறலாம் என்று சிலர் என்னிடம் கூறினர். எங்களுக்கு துரதிஷ்டம் கொண்டு வந்த அந்த ஆட்டை கசாப்புக்கடையில் விற்குமாறு பலர் கூறினர். பெரிய குற்றத்தை செய்த ஆட்டை காவல்நிலையத்தில் ஒப்படைத்து விடுமாறு மற்றொருவர் கூறினார்.

எங்கள் வீட்டு செல்லப் பிராணியிடம் கொடூரமாக நடந்துக்கொள்ள கூடாது.அது எங்கள் சொந்தக்குழந்தை போன்றது” என்று கூறினார்.

மேலும் படிக்க