June 6, 2017 தண்டோரா குழு
பசுக்களை கொல்பவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டுமென உத்தரபிரதேச காவல்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் மாடுகளை இறைச்சிக்காக சந்தைகளில் விற்பனை செய்யக்கூடாது என மத்திய அரசு புதிய சட்டத்திருத்தம் கொண்டு வந்தது. இதற்கு பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.
எனினும், பாஜக ஆளும் மாநிலங்கள் மத்திய அரசின் உத்தரவை பின்பற்றத் தொடங்கியுள்ளன.
அந்த வகையில், லக்னோவில் நடைபெற்ற காவல்துறை உயர் அதிகாரிகள் கூட்டத்தில் பேசிய உபி டிஜிபி சுல்கான் சிங்,
பசுக்களை கடத்துவோர் மற்றும் அவற்றை கொல்பவர்கள் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்றும் மூன்று அல்லது அதற்கு மேல் ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த உத்திரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உ.பியில் யோகி ஆதித்யநாத் ஆட்சி நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.