May 31, 2017
தண்டோரா குழு
பசுவை கொல்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும் எனவும் பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் எனவும்ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
சந்தைகளில் மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்யக் கூடாது என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விவகாரம் தற்போது நாடு முழுவதும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
மத்திய அரசுக்கு எதிராக பல இடங்களிலும் போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றன. கேரளா, கர்நாடக, மேற்கு வங்கம் என பல மாநில அரசுகளும் இந்த விவகாரம் தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் மாட்டிறைச்சி தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில்
“ பசுவை கொல்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும். பசுவை கொல்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் ராஜஸ்தான் அரசு சட்டம் இயற்ற வேண்டும். பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்” என ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.