September 6, 2017
தண்டோரா குழு
பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் சட்டத்தை கையில் எடுத்துக்கொள்பவர்களைக் கண்காணிக்க அதிகாரிகளை நியமிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பசு பாதுகாப்பு பெயரில் நடக்கும் வன்முறை தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு விசாரணையின் போது பசு பாதுகாப்புப்பின் பெயரால் தலித் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக விளக்கமளிக்க ஆறு மாநிலங்களுக்கு உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில்,இன்று இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பசு பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறையை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இதற்காக மாவட்டந்தோறும் கண்காணிப்பு அதிகாரிகளை நியமிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.