January 26, 2017
தண்டோரா குழு
தனது படங்களுக்கான படப்பிடிப்புகளில் பெப்சி, கோக் ஆகிய குளிர்பானங்கள் வழங்கப்படமாட்டாது. அதற்கு அனுமதியில்லை என்று திரைப்பட இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் அறிவித்தார்.
ஜல்லிக்கட்டுக்காக தமிழகம் முழுவதும் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டனர். அதில் ஒரு கோரிக்கையாக வெளிநாட்டு குளிர்பானங்களான பெப்சி கோக் போன்ற குளிர்பானங்களைத் தடை செய்ய வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது.
அதையெடுத்து தற்போது தமிழகத்தில் பெப்சி, கோக் போன்ற வெளிநாட்டு குளிர்பானங்கள் விற்கக்கூடாது என ஒரு கருத்து வலுப்பெற்று வருகிறது. இந்நிலையில், கத்தி படத்தின் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், “கத்தி படத்துக்குக் கதை எழுதத் தொடங்கியதிலிருந்தே பெப்சி, கோக் ஆகியவற்றைப் பயன்படுத்துவதில்லை. இனி படப்பிடிப்பிலும் அவற்றை அனுமதிக்க மாட்டேன்” என்று கூறியுள்ளார்.
முருகதாசின் முடிவுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. கத்தி படத்தின் மையக் கதையே கார்ப்பரேட்டுக்கு எதிரானதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.