• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பட்ஜெட் உரையில் சசிகலா பெயரைக் குறிப்பிடுவதா? சட்டப் பேரவையில் ஸ்டாலின் ஆட்சேபம்

March 16, 2017 தண்டோரா குழு

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் தண்டனை பெற்றுவரும் சசிகலாவின் பெயரைக் குறிப்பிடலாமா என்று எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க. ஸ்டாலின் ஆட்சேபம் தெரிவித்தார்.

தமிழக அரசின் 2017-18ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தமிழக நிதியமைச்சர்
டி. ஜெயகுமார் வியாழனன்று தாக்கல் செய்தார். முன்னதாக சட்டப் பேரவை காலையில் கூடியதும், அவரைப் பட்ஜெட் தாக்கல் செய்ய பேரவைத் தலைவர் தனபால் அழைத்தார். அதையடுத்து பட்ஜெட் உரையைத் தொடங்கிய அமைச்சர் ஜெயகுமார் உரையின் தொடக்கப் பகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவைப் புகழ்ந்து பேசியதுடன், அவர் அறிவித்த நலத் திட்டங்களையும் சுட்டிக் காட்டினார்.

தொடர்ந்து, நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய அனுமதித்ததாகக் கூறி முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி, அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார்.

அப்போது மு.க. ஸ்டாலின் எழுந்து, “சட்டப்படி தண்டனை பெற்று, சிறையில் உள்ள ஒருவருடைய பெயரை இந்த அவையில் குறிப்பிடுவது சரியாக இருக்குமா… மரபு அல்ல…“ என்றார்.

ஆனால், அவரது ஆட்சேபத்தை சட்டப் பேரவைத் தலைவர் தனபால் நிராகரித்தார். “இது குறித்து முன்பே நான் உத்தரவு பிறப்பித்துவிட்டேன்.. இது தொடர்பாகப் பேச வேண்டாம்” என்றார் அவர்.

அவை முன்னவர் கே.ஏ. செங்கோட்டையன் எழுந்து, “இதைப் போல் பல தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த முன் நிகழ்வுகள் இருக்கின்றன. அவற்றையும் எங்களால் சுட்டிக் காட்ட இயலும்“ என்றார்.

அதைத் தொடர்ந்து பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய அமைச்சர் ஜெயகுமாரை பேரவைத் தலைவர் அழைத்தார்.

அப்போது பேசிய நிதியமைச்சர் ஜெயகுமார்,

“164 தேர்தல் வாக்குறுதிகள் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டுள்ளன.மேலும் 55 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.

இந்த நிதிநிலை அறிக்கையில், 2017-18ம் ஆண்டு நிதிப் பற்றாக்குறை ரூ. 41,977 கோடி என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

அமைச்சர் குறிப்பிட்ட சில அம்சங்கள்:

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக உயர்ந்துள்ளது.
தமிழக அரசின் கடன் ரூ.1 லட்சம் கோடி அதிகரித்துள்ளது.

பால்வளத் துறைக்கு ரூ.130 கோடியும், மீன்வளத் துறைக்கு ரூ.768 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

நீராதார மேலாண்மை,வறுமை ஒழிப்பு தூய்மை தமிழ்நாடு ஏழைகளுக்கு வீட்டுவசதி உள்ளிட்ட நோக்கங்கள் அடிப்படையில் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க