July 15, 2017
தண்டோரா குழு
இந்தியாவின் முன்னணி வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில்,என்இஎஃப்டி (NEFT) மற்றும் ஆர்டிஜிஎஸ் (RTGS) மூலமாக பணப்பரிமாற்ற செய்ய சேவைக்கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் இணையதளம் மூலம் என்இஎஃப்டி (NEFT) மற்றும் ஆர்டிஜிஎஸ் (RTGS) மூலமாக வாடிக்கையாளர்கள் ஒரு வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு வங்கிக் கணக்குக்கு பணப்பரிமாற்றம் செய்வதற்கு 75% கட்டணம் குறைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் முறையிலான பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை ஸ்டேட் பாங்க் மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.
மேலும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கடந்த சில தினங்களுக்கு முன் ஐ.எம்.பி.எஸ்(IMPS)சேவை மூலம் பணப்பரிமாற்ற செய்ய சேவைக்கட்டணம் உயர்த்தப்பட்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.