April 27, 2017
தண்டோரா குழு
எஸ் எஸ் ராஜமெளலியின் பாகுபலி-2 திரைப்படம் நாளை உலகம் முழுவதும் மிகப்பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இப்படத்தை காண கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருகின்றனர்.
இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வாரங்கல் மாவட்டக் கலெக்டர் அமர்பளி கட்டா அடிமட்டப் பணியாளர்களுக்கு பாகுபலி2 படத்திற்கான இலவச டிக்கெட் வழங்கியுள்ளார்.
இவர், வாரங்கல் மாவட்டத்தை சுத்தமாகவும், அழகாகவும் வைக்க உதவும் அலுவலர்களுக்கும் துப்புரவு பணியாளர்களுக்கும் நாளை வெளிவர இருக்கும் ‘பாகுபலி-2’ படத்துக்கு, 500 ரூபாய் மதிப்புள்ள டிக்கெட்டுகளை முதல் நாள், முதல் காட்சிக்கு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.இதை அவர் உழைப்பாளர்களின் உழைப்பை அங்கீகாரிக்கும் விதமாக செய்துள்ளாராம்.