May 6, 2016 தண்டோரா குழு
சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் இருக்கும் பாதுகாப்புக் குறைபாட்டைக் கண்டறிந்துத் தெரியப் படுத்தியதற்காக பின்லாந்து நாட்டைச் சேர்ந்த பத்து வயது சிறுவனுக்கு இன்ஸ்டாகிராம் நிறுவனம் பத்தாயிரம் டாலர் பரிசளித்துள்ளது.
சமூக வலைத்தளமான பேஸ்புக் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பகிர்வதற்காக இன்ஸ்டாகிராம் என்ற புதிய ஆப் வசதியை உருவாகியது. இதனை பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் இன்ஸ்டாகிராமை பயன்படுத்துவதற்குத் தேவையான வயதைக் கூட எட்டாத பின்லாந்து நாட்டைச் சேர்ந்த 10 வயதான ஜனி என்ற சிறுவன், இன்ஸ்டாகிராமில் மற்றவர்கள் பதியும் கருத்துகளை தன்னால் ஹாக் செய்து அழிக்க முடியும் என்பதைக் கண்டறிந்து அந்நிறுவனத்திற்கு தெரியப் படுத்தியுள்ளான்.
இதனைத் தொடர்ந்து அக்குறைபாட்டினை உடனடியாக சரிசெய்யப்பட்டதாக இன்ஸ்டாகிராம் நிறுவனம் தெரிவித்திருந்தது. மேலும் இக்குறையைக் கண்டறிந்து தங்களுக்குத் தெரியப்படுத்திய பத்து வயது சிறுவன் ஜானிக்கும் இன்ஸ்டாகிராம் நிறுவனம் 10 டாலர் பரிசு வழங்கியது.
பின்னர், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜனி, தான் வளர்ந்ததும் இணையப் பாதுகாப்பு ஆய்வாளராக விரும்புவதாகத் தெரிவித்துள்ளான்.
மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் தமது சமூக வலைத்தளங்களில் இருக்கும் குறைபாடுகளை சுட்டிக் காட்டியவர்களுக்கு இதுவரை 40 லட்சம் டாலர் பரிசாக கொடுத்திருப்பதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.