January 25, 2017 தண்டோரா குழு
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புதன்கிழமை(ஜனவரி 25) காஷ்மீர் ராணுவ முகாம் மீது ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 5 வீரர்கள் உயிரிழந்தனர்.
இது குறித்து காவல்துறை அதிகாரி செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறுகையில்
“காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சொனாமார்கில் உள்ள ராணுவ முகாம் மீது பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் ராணுவ உயர் அதிகாரி ஒருவர் உட்பட 5 வீரர்கள் உயிரிழந்னதுள்ளனர்.இறந்த வீரர் ஒருவருடைய சடலம் கிடைத்துள்ளது. இறந்தவர்களுடைய எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என கருதுகிறேன்.”
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சில நாட்களாகவே கடுமையான உறைப்பனி பெய்து வருகிறது. முன்னதாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பண்டிபோரா மாவட்டத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் 4 பேர் உயிரோடு புதைக்கப்பட்டனர். ஜனவரி 26ம் தேதி வரை பரவலாக மழை மற்றும் பனிப்பொலிவு இருக்கும் என்று பிராந்திய வானிலை ஆய்வு அலுவலகம் அறிவித்துள்ளது.
இதையடுத்து மலைப்பகுதி மலை அடிவாரத்தில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.