December 20, 2016 தண்டோரா குழு
புது தில்லியில் காணப்படும் மூடுபனியால் 34 ரயில்கள் தாமதம் மற்றும் 2 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
இந்திய தலைநகர் புதுதில்லி மற்றும் வட மாநிலங்களில் தொடர்ந்து காணப்படும் மூடுபனி மற்றும் குளிர் காற்றால் மக்கள் பல சிரமங்களுக்கு ஆளாகின்றனர். புது தில்லியில் திங்கள்கிழமை (டிசம்பர் 19) குறைந்த வெட்ப நிலை 11.2 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது.
இது குறித்து இந்திய ரயில்வே அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
வட இந்தியாவில் பல இடங்களில் மூடுபனியால் போக்குவரத்து, ரயில் மற்றும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, 34 ரயில்கள் புதுதில்லியில் இருந்து தாமதமாக புறப்படும். செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 2௦) புறப்பட வேண்டிய 2 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏழு ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
அதே போன்று, திங்கள்கிழமை காலை புறப்பட வேண்டிய 24 ரயில்கள் தாமதமாகப் புறப்பட்டது. அத்துடன், 5 ரயில்களின் நேரம் மாற்றப்பட்டது.