• Download mobile app
28 Nov 2024, ThursdayEdition - 3214
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பப்புவா நியூ குனியா, நாட்டின் இந்திய வர்த்தக ஆணையராக கோவையை சேர்ந்த விஷ்ணு பிரபு நியமனம்!

January 8, 2022 தண்டோரா குழு

பப்புவா நியூ குனியா, நாட்டின் இந்திய வர்த்தக ஆணையராக கோவையை சேர்ந்த விஷ்ணு பிரபு நியமிக்கப்பட்டுள்ளார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு உற்ச்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னையில் நேற்று , நடைபெற்ற விழாவில்,தமிழக அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன் மற்றும் செஞ்சி மஸ்தான் முன்னிலையில், பப்புவா நியூ குனியா நாட்டின் இந்தியாவிற்கான வர்த்தக ஆணையராக டாக்டர் விஷ்ணு பிரபுவை, பப்புவா நியூ குனியா நாட்டின் தூதர் பவுலிஸ் கோர்னியா முன்னிலையில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று விமான மார்க்கமாக கோவை வந்தடைந்த விஷ்ணு பிரபுவுக்கு விமான நிலையத்தில் உற்ச்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விஷ்ணு பிரபு,

பப்புவா நியூ குனியா நாட்டின் வர்த்தக ஆணையராக என்னை நியமனம் செய்த அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்து கொள்வதாகவும், பப்புவா நியூ குனியா நாடு, அதிக அளவில் தங்கம் உற்பத்தியாகும் நாடாக உள்ளது. பப்புவா நியூ குனியா நாட்டிற்க்கும். இந்திய நாட்டிற்கும், ஒரு பாலமாக இருந்து, இரு நாட்டின் வர்த்தகத்தை பெருக்குவது என்னுடைய பணியாக இருக்கும், என்றும், ஈரான், ஈராக் எப்படி எண்ணை வளம் மிக்க நாடோ, அதோபொன்று தங்க வளம் மிக்க நாடாக இந்த பப்புவா நியூ குனியா நாடும், இருந்து வருகின்றது.

அங்கு இருக்கும் தங்கங்களை இந்திய நாட்டில் வர்த்தகம் செய்வதன் மூலமாக நமது நாட்டில் பலருக்கு, வேலைவாய்ப்பும், வர்த்தகமும், பெருகும் ஏனேனில் உலக அளவில் 11 சதவிகிதம் மக்கள் தங்க நகைகளை பயன்படுத்துவது இந்திய நாட்டில் இந்தியர்கள் தான், எனவே இந்த பப்புவா நியூ குனியா நாட்டுக்கும் இந்திய நாட்டுக்கும் தங்கத்தின் வர்த்தகத்தை மேம்படுத்தி தொழில் வளத்தை பெருக்க நான் பாடுபடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க