September 8, 2017 தண்டோரா குழு
பம்புசெட், உதிரி பாகங்கள், போர்வெல் கம்ப்ரெசர்கள் தயாரிப்பு நிறுவனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்கக் கோரி, கோவை பம்புசெட்,மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் தொழிற் கூடங்களை இன்று ஒரு நாள் கதவடைப்பு,செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜிஎஸ்டி வரி விதிப்பினால் சிறு,குறு தொழில் முனைவோருக்கு வழங்கப்பட்டு வந்த குறைக்கப்பட்டன.ஜிஎஸ்டி எண் இருந்தால் மட்டுமே பெரிய நிறுவனங்கள் ஜாப் ஆர்டர்கள் வழங்குவதால் தொழில்கள் நசியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவையில் சிறு,குறு பம்ப்செட் உற்பத்தியாளர்கள், மோட்டார் பம்ப்செட் உதிரிபாக தயாரிப்பாளர்கள் சார்பாக இன்று ஒருநாள் கதவடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோப்மா சங்க தலைவர் மணிராஜ் தலைமையில் கோவை டாடாபாத்தில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோசங்கள் எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மணிராஜ்
“இது வரை 5 சதவித வரிமட்டுமே செலுத்தி வந்தத நிலையில் தற்போது 12 சதவீத செலுத்த வேண்டியுள்ளது. உதிரி பாகங்களுக்கு 12 முதல் 28 சதவீதம் வரை செலுத்த வேண்டியுள்ளதால் 80 சதவீத தொழிற்சாலைகள் முடங்கி உள்ளது.”என தெரிவித்தார்.
இத்தொழில் மீதான ஜிஎஸ்டி வரியை உடனடியாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று ஒரு நாள் அடையாள கதவடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாகவும் இதில், சுமார் 3,000 பம்ப்செட் தொடர்பான அனைத்து தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களை சேர்ந்த தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டுள்ளதாக தெரிவித்த அவர்,இன்று ஒருநாள் மட்டும் சுமார் 50 கோடி அளவிற்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.