December 12, 2016 தண்டோரா குழு
பாகிஸ்தான் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த தவறினால், அந்நாடு பத்து நாடுகளாக உடையும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம் சாற்றியுள்ளார்.
இது குறித்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கத்துவா என்னும் இடத்தில் ஞாயிற்றுக்கிழமை(டிசம்பர் 11) நடந்த கூடத்தில் அவர் பேசியதாவது:
தீவிரவாதத்தால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவிடம் இருந்து பிரிக்க பாகிஸ்தான் முயற்சி செய்கிறது. ஆனால், தீவிரவாதம் என்பது கோழைகளின் ஆயுதமே தவிர வீரர்களின் ஆயுதம் இல்லை.
மேலும், மத அடிப்படையில் இந்தியாவை பிரிக்க நினைக்கிறது. ஆனால் அந்த முயற்சி ஒருபோதும் வெற்றி அடையாது. 1947ம் ஆண்டு மதத்தை கொண்டு இந்திய தேசத்தை இரண்டாக பிரிந்தது இந்திய மக்களால் இன்னும் மறக்க முடியவில்லை.
இந்திய தலைவர்கள் பாகிஸ்தானுடன் நல்லுறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்று தான் விரும்புகின்றனர். ஆனால், இந்த நல்லேனத்திற்கு உரி, குருதாஸ்பூர், பதான்கோட் ஆகிய இடங்களில் தீவிரவாத தாக்குதலை பாகிஸ்தான் நடத்தியது. அந்நாடு இந்தியாவை தொடர்ந்து தாக்கியதே தவிர இந்திய ஒருபோதும் அதை தாக்கியது கிடையாது.
பாகிஸ்தான் தீவிரவாதத்தை கட்டுபடுத்தாமலும், அவர்களுடைய வழியை செம்மைபடுத்தாமலும் இருந்தால், அந்நாடு பத்து நாடுகளாக உடையும். அதில், இந்தியாவிற்கு எந்த பங்கும் இருக்காது என்று எச்சரித்துள்ளார். மேலும், பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஒழிக்க இந்தியாவின் உதவியை நாடியால், அந்த சக்தியை நிர்மூலமாக்க இந்தியா தயாராக உள்ளது.
விரிவான இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் முதன்மையான பிரச்னையை தீர்க்க இருநாடுகளும் திட்டமிடிருந்தது. ஆனால், ஜனவரி 2ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் பதான்கோட்டை தாக்கினர். அந்த தாக்குதலை தொடர்ந்து இந்திய எல்லை பகுதியில் பல தாக்குதல்களை நடத்தியதால் பேச்சுவார்த்தை நடக்கவில்லை.இவ்வாறு அவர் தெரிவித்தார்.