• Download mobile app
07 Jul 2024, SundayEdition - 3070
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பயன்படுத்தப்பட்ட கார்கள் விற்பனைக்கான ‘ஃபோக்ஸ்வேகன் சர்டிபைடு ப்ரீ-ஓன்டு’ ஷோரூம் கோவையில் திறப்பு

July 4, 2024 தண்டோரா குழு

பயன்படுத்தப்பட்ட கார்கள் விற்பனைக்கான ‘தாஸ் வெல்ட் ஆட்டோ’ என்னும் பெயரில் உள்ள நிறுவனத்தை ‘ஃபோக்ஸ்வேகன் சர்டிபைடு ப்ரீ-ஓன்டு’என பெயர் மாற்றம் செய்து தனது முதல் ஷோரூமை கோவையில் ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் திறந்துள்ளது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ரமணி ஃபோக்ஸ்வேகன் கார் ஷோரூமில் நடைபெற்ற திறப்பு விழாவில் ஃபோக்ஸ்வேகன் சர்டிபைடு ப்ரீ-ஓன்டு’ ஷோரூமை ஃபோக்ஸ்வேகன் பாசஞ்சர் கார்ஸ் இந்தியாவின் பிராண்ட் இயக்குனர் ஆஷிஷ் குப்தா திறந்து வைத்தார். ரமணி ஃபோக்ஸ்வேகன் குழும நிர்வாக இயக்குனர் சுதர்சன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து போக்ஸ்வேகன் பாசஞ்சர் கார்ஸ் இந்தியாவின் பிராண்ட் இயக்குனர் ஆஷிஷ் குப்தா கூறுகையில்,

இந்த புதிய ஷோரூமில் பல்வேறு நிறுவனங்களின் கார்கள் இடம் பெற்று இருப்பதோடு,பயன்படுத்தப்பட்ட ஃபோக்ஸ்வேகன் மாடல்களுக்கு இது முக்கியத்துவம் அளிக்கிறது. இங்கு விற்பனை செய்யப்படும் கார்களுக்கு தேவைப்படும் நிலையில் அவற்றை புதுப்பித்தல், சான்றிதழ் மற்றும் உத்தரவாதங்களை வழங்குகிறது. இந்த பெயர் மாற்றத்தின் மூலம் இந்த துறையில் தனித்து நிற்கும் வகையில் வாடிக்கையாளர்களுக்கு எந்தவித சிரமமும் இல்லாத முழுமையான டிஜிட்டல் மயமாக்கப்பட்ட சேவைகளை வழங்க இருக்கிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு உயர்தர, சான்றளிக்கப்பட்ட கார்களை வழங்கி, பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த நடவடிக்கையை இந்நிறுவனம் மேற்கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும் வாடிக்கையாளர்கள் தங்கள் கார்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குவதற்காக ஆட்டோபெஸ்ட் மெகா எக்ஸ்சேஞ்ச் மேளா 2024ஐ ஜூலை 3-ந்தேதி முதல் ஜூலை 20-ந்தேதி வரை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது என்றார்.

மேலும் படிக்க