• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரியை நீக்க வேண்டும் அரசுக்கு இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பு மற்றும் சைமா கோரிக்கை !

July 24, 2023 தண்டோரா குழு

110 மில்லியன் மக்களுக்கு வேலை வாய்ப்பளித்து,44 பில்லியன் அமெரிக்க டாலர் அந்நிய செலவாணி ஈட்டியும், ரூ.25,000 கோடி சரக்கு மற்றும் சேவை வரி பெற்று தந்து,இவுனித் தொழிலதுறையாகும்.உக்ரைன-ரஷ்யாவிற்கு இடையேயான நீண்ட போர் கரணமாக ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா நாடுகளில் ஏற்பட்ட பாதிப்பு, உயர் பணவீக்கம், உலகளவிலான பொருளாதார மந்தநிலை, பருத்தி மீது விதிக்கப்பட்ட 11 சதவீத இறக்குமதி வரி, தரக்கட்டுப்பாட்டு ஆணைகளை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சில நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக செயற்கை இழைகளின் விநியோகத்தில் ஏற்பட்ட இடையூறு போன்ற காரணங்களினால் இந்திய ஜவுளித் தொழில் இதுவரை காணாத நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது.

ஒட்டு மொத்த ஜவுனி ஏற்றுமதியில் 18 சதவீத சரிவு, நூல் ஏற்றுமதியில் 50 சதவீத சரிவு, பருத்தி ஜவுளி ஏற்றுமதியில் 13 சதவீத சரிவு ஆகியவை முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் அதிகமாக உள்ளதால், தொழில் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

ஜவுளி மதிப்புச் சங்கிலியில், அதிக மூலதனம் செய்யப்பட்டு குறிப்பாக நூற்பு மற்றும் நெசவு துறைகளில் 30 சதவீதம் அதிகமாக உற்பத்தி திறன் உருவாக்கப்பட்டுள்ளது.எதிபாராத நிதி நெருக்கடி காரணமாக நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான ஜவுளி ஆலைகளுக்கு வங்கிகள் சிவப்பு எச்சரிக்கை கொடுத்துள்ளன.கொரோனா காலத்தில் கொடுக்கப்பட்ட குறுகியகால கடன்களை திருப்பி செலுத்துதல், ஜவுளித் தொழிலின் நிதிச்சுமையை கணிசமாக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான நூற்பாலைகள் சிறு, நடுத்தர, குறு வகையை சார்ந்தவை. அவர்கள் ஜூலை 15. 2023 முதல் உற்பத்தி மற்றும் நூல் விற்பனையை நிறுத்துவதாக அறிவித்துள்ளனர். பருத்தி விலையில் ஏற்படும் அதிக ஏற்ற இறக்கம் மற்றும் ஊக வர்த்தகம் போன்றவற்றால் நூற்பாலை துறையினரின் நடப்பு மூலதனம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், பருத்தியின் விலை ஏப்ரல் 2023ல் 355 கிலோ எடை கொண்ட கண்டி ஒன்றுக்கு ரூ.63,000 என்று இருந்தது, ஜூலை 2023ல் விலை ரூ.56,000 ஆக குறைந்தது. தற்போதைய பருத்தி விலையில் கூட ஒரு கிலோ நூலுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை நூற்பாலைகளுக்கு இழப்பு ஏற்படுகிறது, தமிழகத்தில் அமலுக்கு வந்த மின் கட்டண உயர்வால் 2000க்கும் மேற்பட்ட சிறு. நடுத்தர, குறு வகையை சேர்ந்த நூற்பாலைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

ஏனெனில், ஏற்கனவே அவர்கள் பருத்தியை குஜராத், மராட்டியம் மற்றும் இதர மாநிலங்களில் இருந்த கொண்டு வருவதற்கு கிலோ ஒன்றுக்கு ரூ.3 முதல் ரூ.6 வரை போக்குவரத்திற்கு செலவு செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து கோவையில் இன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பின் தலைவர். த.ராஜ்குமார் மற்றும் தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் தலைவர் ரவி சாம் ஆகியோர் கூறுகையில்,

ஜவுளி மற்றும் ஆடைத் தொழிலில் 3 சதவீதம் முதல் 6 சதவீதம் வரையே இலாபம் கிடைப்பது வழக்கம். ஆனால், தற்போது இந்த துறையினர் 5 முதல் 10 சதவீதம் வரை நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில் ஜவுளித் தொழிலுக்கு போர்கால அடிப்படையில் இடைக்கால நிதி நிவாரணம் தேவைப்படுகிறது என்று அவர்கள் தெரிவித்தனர். அவ்வாறு இடைக்கால நிதி நிவாரணம் கிடைக்காவிட்டால் சிறு, நடுத்தர. நூற்பாலைகள் செயல்படாத சொத்தாக மாறும் நிலை ஏற்படும் என்றும் இதனால் நிதி நிறுவனங்களும் பாதிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

நாட்டிலுள்ள 75 சதவீதத்திற்கும் அதிகமான ஜவுளி ஆலைகள் சிறு, நடுத்தர, குறு வகை நூற்பாலைகள் என்பது குறிப்பிடத்தக்கது என்று அவர்கள் கூறினார்கள் மேலும், மின் கட்டணத்தில் சில நிவாரணங்களை அளிக்க வேண்டும் என்று அவர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளுடனான வரியில்லா வர்த்தக ஒப்பந்தங்களை துரிதப்படுத்த மேற்கொண்ட
முயற்சிகள். அதன் மூலம் 8 முதல் 26 சதவீதம் வரை வரி ஏற்றுமதியை தவிர்த்து ஜவுளிப் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிப்பது போன்ற மத்திய அரசின் முயற்சிகளை ராஜ்குமார் மற்றும் ரவி சாம் வெகுவாக பாராட்டினார்கள்.

அதே போன்று தமிழக அரசும் தொழில கொள்கை மற்றும் சிறு, நடுத்தர, குறு வகை தொழிற்சாலைகளுக்கு அறிவித்துள்ள தொழில் கொள்கை மற்றும் தொழில்நுட்ப ஜவுளிக்கு அறிவித்த சிறப்பு திட்டங்களை அவர்கள் பாராட்டினார்கள், பல்வேறு நாடுகளுடனான வரியில்லா ஒப்பந்தத்தின் உண்மையான பலன்களை 2024ம் ஆண்டில் மட்டுமே அறுவடை செய்ய முடியும் என்றும், மத்திய, மாநில அரசுகளின் எந்த நிவாரணமும் இன்றி ஜவுளி ஆலைகள் நிலைக்க முடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

ராஜ்குமார் மற்றும் ரவிசாம் கீழ்காணும் கோரிக்கைகளை மத்திய அரசுக்கு விடுத்துள்ளார்கள்,-

1. பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரியை நீக்க வேண்டும்

2. தரக்கட்டுப்பாட்டு ஆணைகளை நடைமுறைப்படுத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை நீக்கி செயற்கை இழைகளை பன்னாட்டு விலையில் கிடைக்க வழிவகை செய்து தொழிலில் சமதளம் உருவாக்கப்பட வேண்டும்.

மேலும், அவர்கள் தமிழக அரசிடம் கீழ்காணும் கோரிக்கைகளை விடுத்துள்ளார்கள்:

1. உயர் அழுத்த தொழிற்சாலைகளுக்கு அதிகபட்சமாக நிலைக்கட்டணம் 20 சதவீதம் வரையும் அல்லது பதிவாகும் மின் அளவுக்கு மட்டும் வசூலிக்கப்பட வேண்டும்.

2. குறைவு அழுத்த தொழிற்சாலைகளுக்கு பல்வேறு பளுவிற்கு ஏற்றவாறு முறையே ரூ.75, ரூ.150 மற்றும் ரூ.550 என்று நிலைக்கட்டணம் வசூலிப்பதை தற்காலிகமாக தவிர்க்க வேண்டும்.

3. குறைவு அழுத்த தொழிற்சாலைகளுக்கு வசூலிக்கப்படும் அதிகபட்ச நுகர்வு கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.

மேலும் அவர்கள் கூறுகையில்,

இந்திய வங்கிகள் சங்கத்திற்கு ஏற்கனவே ஒரு மனுவை அனுப்பியுள்ளதாகவும், அதில், அனைத்து சார்ந்த நிறுவனங்களும் தொழில் துறையினருக்கு வேண்டிய உதவிகளை நல்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்

அதன் விவரம் கீழ்வருமாறு:-

1.கடனுக்கான அசலை திருப்பி செலுத்த ஒரு வருட காலம் அவகாசம் வேண்டும்.

2. மத்திய அரசால் வழங்கப்பட்ட கொரோனா தொற்று நிவாரண மூன்றாண்டு கால. கடனை ஆறாண்டு காலமாக மாற்ற வேண்டும்.

3. நடப்பு நிதி மூலத்திற்கு தேவையான கடனை வழங்கி நிதி நெருக்கடியில்
சிக்கியுள்ள சம்மந்தபட்ட தொழில் நிறுவனங்களின் நிலையை கருத்தில் கொண்டு வழங்க வேண்டும்.

மேலும் படிக்க