April 25, 2025
தண்டோரா குழு
கோடை விடுமுறை என்றால் நம்மில் பலர் பகலில் வீட்டைவிட்டுக்கூட வெளியே வர மாட்டோம்.அந்த அளவுக்குக் கோடையின் தாக்கம் இருக்கும்.காலநிலை மாற்றத்தால் கோடைக் காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இந்த வெயிலின் தாக்கம் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் விலங்குகளுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.வெயிலின் தாக்கம் கடந்த இரண்டு வருடங்கலாக அளவுக்கு அதிகமாக உள்ளது.இந்த வெயிலின் தாக்கம் பறவைகள், வனவிலங்குகளின் உயிரிழப்புகளுக்கும் காரணமாகிறது.உணவு இல்லாமல்கூட கொஞ்சம் நாட்கள் வாழலாம்.ஆனால் தண்ணீர் இல்லாமல் வாழ முடியாது என்பது எதார்த்தமான உண்மை.
எனவே நம்மை காப்பது போல், நம்மைச்சுற்றி வாழும் சின்னஞ்சிறிய பறவைகளை இந்த வெயிலின் தாக்கத்திலிருந்து காப்பாற்ற பறவைகளுக்கு தண்ணீர் அருந்துவதற்கும் , குளிப்பதற்கு , ஏற்றது போல் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மொட்டை மாடியில் வையுத்தால் அது உயிர் வாழ உதவியாக இருக்கும் காப்பாற்றுவதற்கான சிறிய முயற்சிகள்தான் பறவைகளுக்குத் தண்ணீர் வைப்பது. இந்த மகத்தான சேவையை வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை – (WNCT) கடந்த நான்கு ஆண்டுகளாக கோடை காலத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பறவையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அன்பளிப்பாக கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்தாண்டு ஐந்தாம் ஆண்டு தொடர்ச்சியாக கோவை மாவட்டம் பெரியகடை வீதி பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி படிக்கும் ஐம்பது மாணவ மாணவிகளுக்கு WNCT ஒருங்கிணைப்பாளர் சிராஜ்தீன் பறவையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பறவைகளின் தாகம் தணிக்க மண் குவளை அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது.