August 9, 2017 தண்டோரா குழு
ஆஸ்திரேலியாவில் பெண்ணின் வயிற்றிலிருந்து 10 ஆண்டுகளுக்கு பிறகு, கம்பியை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் வெளியே எடுத்துள்ளனர்.
ஆஸ்திரேலியா, பெர்த் நகரில் வசிக்கும் 30 வயது பெண், 1௦ ஆண்டுகளுக்கு முன் கோணலான தனது பற்களை சீராக்கும் சிகிச்சை பெற்றுள்ளார். அதற்கு பல் கம்பிகளை பயன்படுத்தியுள்ளார்.
சமீபத்தில் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனே அருகிலிருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், பித்தப்பையில் தான் வலி ஏற்பட்டுள்ளது என்று எண்ணியுள்ளனர். அந்த வலியை குறைக்க மருந்துகளை தந்துள்ளனர்.
ஆனால் வலி குறையாததையடுத்து, மீண்டும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மருத்துவர்கள் சி.டி.ஸ்கேன் எடுத்தனர். ஸ்கேன் முடிவுகளை பார்த்தபோது, அவருடைய சிறு குடலில் கம்பியிருப்பதை கவனித்து உள்ளனர்.
இதனை அடுத்து அந்த பெண்ணிற்கு அறுவை சிகிச்சை மூலம் சிறு குடலிலிருந்த சுமார் 2.8 அங்குலம் நீளமுள்ள கம்பி அகற்றப்பட்டது.