• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பள்ளிக்கல்வித் துறையில் 40 அறிவிப்புகள்- அமைச்சர் செங்கோட்டையன்

June 7, 2017 தண்டோரா குழு

தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்ந்த 40 அறிவிப்புகள் மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;

“தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகள் திகழ்கின்றன. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடநூல், சீருடை உள்ளிட்டவை ஒரு வாரத்திற்குள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 1.3 லட்சம் மாணவர்களுக்கு பாடநூல் உள்ளிட்ட 14 பொருட்களை பள்ளிக்கல்வித்துறை விநியோகிக்க உள்ளது.

மாணவர்கள், மத்திய அரசு தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் சிறப்பு பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். அந்த மையங்களில் சிறந்த ஆசிரியர்களை கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். தமிழக அரசு பாடத்திட்டத்தில் யோகா மற்றும் சாலை விதிகள் விரைவில் சேர்க்கப்படும். தமிழகத்தில் நீட் தேர்வு கொண்டுவரக் கூடாது என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்ந்த 40 அறிவிப்புகள் மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்படும். பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.”

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க