July 1, 2017
தண்டோரா குழு
கோவையை சேர்ந்த பள்ளி மாணவனின் மிருந்த அரங்கேற்றம் பாரதி வித்யாபவனில் நடைபெற்றது.
கோவையை சேர்ந்த ஷியாம்குமார் கவிதா தம்பதியினரின் மகன் சபரீ்ஸ்(16). கோவை அமிர்தா வித்யாலயா பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். மிருதங்க கலை மீது இருந்த ஆர்வதினால் தனது 5 வயது முதல் மிருதங்கம் பயின்று வருகிறார்.
இந்நிலையில் , கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள பாரதிய வித்யாபவனில் இன்று இவரது மிருதங்க அரங்கேற்றம் நடைபெற்றது. இந்த மிருதங்க அரங்கேற்றத்தில் (பாட்டு) தியாகராஜன் , (கதம் )கோவை சுரேஷ், (வயலின் )ஸ்ரீநாகை முரளிதரன் ஆகியோரின் இசை நிகழ்வும் நடைபெற்றது.