March 19, 2022 தண்டோரா குழு
போலாம் ரைட் என்ற தலைப்பில் அரசு பள்ளி மாணவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலுக்கு பின்பு மதிய உணவு உட்கொண்டார்.
அரசுப்பள்ளி மாணவர்கள் சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகளுக்கு திரும்பியுள்ள நிலையில், அவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியருடன் காபி வித் கலெக்டர் என்ற தலைப்பிலான கலந்துரையாடல் கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.தேர்வு செய்யப்பட்ட 50 அரசுப்பள்ளி மாணவ மாணவிகள்,இதில் கலந்து கொண்டு கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரனிடம் கேள்விகளை எழுப்பினர்.
இதை தொடர்ந்து பேருந்து மூலமாக மாணவர்களுடன் கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்திற்கு அவர் பயணித்தார். அப்போது மாணவர்கள் போலாம் ரைட் என்ற உற்சாக குரல் எழுப்பினர். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாணவ மாணவிகளுடன் பூச்சியியல் அருங்காட்சியகத்தை பார்த்தவர். அங்கிருந்து அரசு மருத்துவக்கல்லூரிக்கு சென்றனர்.
அரசு மருத்துவக்கல்லூரியில் வகுப்பறைகள், பாடத்திட்டம் குறித்து தெரிந்து கொண்ட மாணவ மாணவிகளுடன் ஆட்சியர் அங்கேயே மதிய உணவை சாப்பிட்டார்.