July 22, 2022 தண்டோரா குழு
கோவை மாநகரின் முக்கிய கடை வீதிகள், பஸ் நிலையங்களில் பொது மக்களிடையே ரேண்டம் அடிப்படையில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே போகிறது. இதனை தடுக்க மாவட்டம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
உக்கடம், டவுன்ஹால், கிராஸ்கட், காந்திபுரம், 100 அடி சாலை உள்ளிட்ட கடை வீதிகளில் மக்கள் கூடும் இடங்களில் மற்றும் பஸ் நிலையங்களில் கொரோனா பரிசோதனை செய்யும் பணியை கோவை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கோவை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,‘
மக்கள் கூடும் இடங்களில் அனைவரிடமும் கொரோனா பரிசோதனை மாதிரிகளை சேகரிக்காமல் பொதுவாக குறிப்பிட்ட சிலரிடம் ரேண்டம் அடிப்படையில் மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன. இச்சோதனையில், தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் தொடர்புடையோரை கண்டறியும் வகையில் உரிய விவரங்களும் பதிவு செய்யப்படுகின்றன’’ என்றார்.