August 5, 2017 தண்டோரா குழு
பாகிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்து மதத்தை சேர்ந்தவருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் முன்னால் பிரதமர் நவாஸ் ஷெரிப் பனாமா கேட் ஊழல் வழக்கில் சிக்கி தனது பிரதமர் பதவியை இழந்தார். அதை தொடர்ந்து, அவருடைய மந்திரி சபை கலைக்கப்பட்டது.
அதன் பிறகு, பாகிஸ்தான் புதிய பிரதமராக ஷாஹிட் கான் அப்பாசி பதவியேற்றார். அவர் அமைத்த புதிய மந்திரி சபையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்து மதத்தை சேர்ந்த தர்ஷால் லால்(65) சேர்க்கப்பட்டுள்ளார். அவர் பாகிஸ்தான் நான்கு மாகாணங்களின் ஒருங்கிணைப்பு துறைக்கு தலைவராக இருப்பார்.
சேர்ந்த தர்ஷால் லால் சிந்து மாகாணத்தின் கோட்கி மாவட்டத்தில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். கடந்த 2013- ம் ஆண்டு, பாகிஸ்தான் நாட்டின் நடந்த தேசிய பாராளுமன்ற தேர்தலில், மைனோரிட்டி மக்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில், இரண்டாவது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பாகிஸ்தானின் நிதி அமைச்சராக இருந்த இஷாக் தர்ருக்கு எதிராக பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் மன்றத்தில், ஒரு குற்றவியல் வழக்கு விசாரணை இருந்த போதிலும், அவருக்கு மீண்டும் நிதி அமைச்சர் பதவி கிடைத்துள்ளது.
காவாஜா ஆசிப்புக்கு வெளியுறவு துறை அமைச்சராகவும், முன்னால் திட்டத்துறை அமைச்சர் அசன் இக்பால் உள்துறை அமைச்சராகவும், மற்றும் குர்ரம் தஸ்தகீர் ராணுவ மந்திரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.