April 2, 2016 tamil.oneindia.com
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் இருக்கும் ஹஸ்திநாக்ரி பகுதியில் உள்ளது பாய் பீபா சிங் சீக்கியர்கள் கோவில்.
இந்தியா, பாகிஸ்தான் இடையே பிரிவினை ஏற்பட்டு பாகிஸ்தானில் இருந்த இந்தியர்கள் கிளம்பிய பிறகு அந்தக் கோவில் மூடப்பட்டது.
கடந்த 70 ஆண்டுகளாக மூடிக் கிடந்த கோவில் வழிபாட்டிற்காகக் கடந்த புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கோவிலைத் திறந்த உடன் சீக்கியர்கள் அங்குப் பூஜை நடத்தினர். இது குறித்து அனைத்து பாகிஸ்தான் இந்து உரிமை இயக்கத் தலைவர் ஹாரூன் சரப்தியால் கூறுகையில், வரலாற்றுச் சிறப்புமிக்க சீக்கியர் கோவிலை திறந்து வைத்ததன் மூலம் பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கும் சமமான உரிமை அளிக்கப்படுவது தெரிய வந்துள்ளது என்றார்.
கைபர் படுங்க்வா மாகாண முதல்வரின் சிறப்பு உதவியாளர் சர்தார் சுரன் சிங் கூறுகையில், இத்தனை ஆண்டுகளாக மூடிக் கிடந்த கோவிலைத் திறக்கும் முடிவை எடுத்து சிறுபான்மையினருக்கு உரிய உரிமையை அரசு வழங்கியுள்ளது என்றார்.
கோவிலுக்கு 30 லட்சம் ரூபாய் நன்கொடை அளிப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார் சுரன் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.