July 28, 2017 தண்டோரா குழு
பனாமா பேப்பர்ஸ் வழக்கில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் பதவியை நீக்கி அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறபித்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வெளிநாடுகளில் ரகசிய முதலீடுகள் செய்திருப்பதாகவும், வங்கிகளில் ரகசியமாக பணத்தை பதுக்கி வைத்திருப்பதாகவும் சர்வதேச புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பு ‘பனாமா லீக்ஸ்’ என்ற பெயரில் ஆவணங்களை வெளியிட்டது.
இது தொடர்பாக பாக்கிஸ்தான் உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டது. இதனை அடுத்து பாகிஸ்தான் மத்திய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தியது.இந்த விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து இன்று தீர்ப்பு வழங்கிய அந்நாட்டு உச்ச நீதிமன்றம், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பை பதவி நீக்கம் செய்து அதிரடி உத்தரவை பிறப்பித்தது.பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் பதவி பறிக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.