February 6, 2017 தண்டோரா குழு
பாகிஸ்தானில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்தின் மெய்க்காவலர் சுட்டதில், தூதரக அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.
கராச்சி நகரின் கிளிப்டன் என்னும் இடத்தில் உள்ள உயர் பாதுகாப்பு பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது.
இது குறித்து காவல்துறை அதிகாரி திங்கள்கிழமை (பிப்ரவரி 6) கூறியதாவது:
ஆப்கானிஸ்தான் தூதரகத்தின் மூன்றாம் செயலராக இருந்த முகமது ஸகி அப்து.
அப்போது தூதரகத்தின் பாதுகாவலர் ரஹதுல்லா தூதரக அதிகாரியை நோக்கித் துப்பாக்கியால் சுட்டார். அதில் குண்டு பாய்ந்த முகமது ஸகி அங்கேயே சரிந்து விழுந்து இறந்தார். ரஹதுல்லா அவரைச் சுட்டுக் கொல்ல இயந்திர துப்பாக்கியைப் பயன்படுத்தியுள்ளார். அவரும் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர். அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளோம்” என்றார்.
பாதுகாப்பு படை அலுவலகம் வெளியிட்ட செய்தியில், ”தனிபட்ட பகையால் இச்சம்பவம் நடந்திருக்கும் என்று கருதுகிறோம்” என்று கூறியுள்ளது.
இதையடுத்து தூதரகம் சுற்றியுள்ள சாலைகள் மூடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் காவல்துறையினரும் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினரும் அவ்விடத்தை சுற்றி வளைத்து பாதுகாத்து வருகின்றனர்.