April 27, 2017
தண்டோரா குழு
எஸ்எஸ் ராஜமெளலியின் இயக்கத்தில் நாளை உலகமெங்கும் 9000 திரையரங்கில் வெளியாகவுள்ளது பாகுபலி 2 படம். இப்படத்தை பார்க்க ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருகின்றனர்.
எனினும், படத்தை தணிக்கை குழு மற்றும் பல்வேறு வழிகளில் பார்த்த நபர்கள் அதன் விமர்சனத்தைப் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
அந்த வகையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தணிக்கை அலுவலகத்தில் பணியாற்றும் உமைர் சந்து, தன்னுடைய வலைத்தளத்தில் படத்தின் விமர்சனத்தை வெளியிட்டுள்ளார். அதில், படத்தின் வி.எஃப்எக்ஸ் காட்சிகள் – ஹாலிவுட்டின் லார்ட் ஆஃப் தி ரிங்ஸ், ஹாரி பாட்டர் படங்களுக்கு நிகராக உள்ளது. பிரபாஸ், ராணாவின் நடிப்பு அருமை. முக்கியமாக ராணாவின் சீற்றம் படத்தில் அருமையாக வெளிப்பட்டுள்ளது. மேலும், துணைக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் ஆகியோரின் நடிப்பு சிறப்பாக இருந்ததாகக் கூறியுள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்சார் போர்டில் படத்துக்கு ஸ்டேண்டிங் ஒவேஷன் கிடைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுபோன்ற ஒரு படம் இந்தியத் திரையுலகுக்குப் பெருமைக்குரியது என படத்தை வெகுவாகப் புகழ்ந்துள்ள உமைர், படத்தின் கதையைச் கடைசி வரை சொல்லவே இல்லை. முக்கியமாக, கட்டப்பா, பாகுபலியை கொன்றது ஏன் என்கிற ரகசியத்தையும் அவர் சொல்லவில்லை.