April 27, 2017
தண்டோரா குழு
எஸ்.எஸ்.ராஜமெளலியின் பிரம்மாண்டமான படைப்பான பாகுபலி 2 படம் நாளை உலகமெங்கும் வெளியாகவுள்ளது. சும்மர் 9000 திரையரங்கில் வெளியாகும் இப்படத்தினை காண பலரும் ஆவலுடன் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் பிரசாத் ஐமேக்ஸ் தியேட்டரில் டிக்கெட் எடுக்க கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து ரசிகர்கள் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர்.
சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை ரசிகர்கள் வரிசையில் நின்றதால் பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.