பூனே நகரில் வசித்து வரும் சுதிர் டக்டுமல் ஷா(65) என்பவர் ஷிரூர் என்ற இடத்தில் மின்னணு கடை ஒன்றை நடத்தி வந்தார். பின்னர் உறவினருடனான பிரச்சனையில் அந்தக் கடை குறித்த வழக்கு தற்போது நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அவர் தனது மகன், மருமகள் மற்றும் பத்து வயது பேரன் ஜினய் ஆகியோருடன் வசித்து வந்தார்.
அவரது மகன் கடந்த சில நாட்களுக்கு முன் கடையை காலிசெய்து எடுத்து வரச் சென்றபோது வழக்கு இருப்பதால் முடியாமல் போனது. இதனிடையே வீட்டில் இருந்த ஷா எப்போது தனது பேரனுடனேயே விளையாடுவது, அவனைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு மீண்டும் அழைத்து வருவது என அவனுடனேயே பொழுதைக் கழித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 19ம் தேதி அவர் கூறியிருக்கும் பகுதியின் வாச்மேன் வந்து ஷாவின் மகன் பரேஷை எழுப்பி அவசரமாக அலைத்துச் சென்றான். அங்குப் பொய் பார்த்தால் ஷா மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொடுள்ளார். அப்போதுதான் தன்னுடைய மகனும் அவருடன் இருந்தது நினைவிற்கு வரவே ஓடிச்சென்று 7 மாடியில் உள்ள தனது வீட்டுப் படுக்கை அறையைப் பார்த்துள்ளார் அங்கு அவரது மகனும் கழுத்து நசுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.
தகவலறிந்து வந்த காவல்துறையினர் இரண்டு பிரேதங்களையும் கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் அந்த அறையைச் சோதனை போட்டதில் ஒரு கடிதம் கிடைத்துள்ளது. அதில் நான் இன்னும் அதிகபட்சம் பத்து ஆண்டுகள் தான் உயிருடன் இருப்பேன் ஆனால் அதுவரை நான் வழக்குக்காக நீதிமன்றத்திற்கு நடந்து நடந்து கழிக்க முடியாது.
அதனால் நான் என் முடிவைத் தேடிக்கொள்கிறேன். மேலும் எனது பேரனும் நானும் மிக அதிக பாசத்துடன் இருந்துவிட்டோம் அதனால் அவன் இல்லாமல் என்னால் இருக்க முடியாது அவனையும் அழைத்துச் செல்கிறான் எனவும், அவனை நான் நன்றாகப் பார்த்துக்கொள்வேன் என்றும் எழுதப்பட்டிருந்தது. ஆனால் அதில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் மீண்டும் தங்களது விசாரணையைத் துரிதப்படுத்தியுள்ளனர். எது எப்படி இருந்தாலும் பேரன் மீது இருந்த அளவுக்கதிகமான பாசத்தால் அவனைக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட தாத்தாவை அப்பகுதியினர் திட்டியபடியே உள்ளனர்.
கல்வியில் அரசியலை புகுத்த வேண்டாம் – கோவையில் ஜிகே வாசன் பேட்டி
வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) சார்பில் ஆர்ப்பாட்டம்
ராக்ஸ் பாட்மிண்டன் அகாடமியின் கூட்டுமுயற்சியால் தேசிய மற்றும் உலக அளவில் ஜொலிக்கும் இளம் வீரர்கள்!
சசி கிரேட்டிவ் கல்லூரியில் சிறந்த கட்டிடக்கலை நிபுணர் மற்றும் வடிவமைப்பாளர்கான விருது
யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் 19வது புதிய மண்டல அலுவலகம் கோவையில் திறப்பு !
மார்ச் 2025-ல் 7,422 கார்களை விற்று மிக அதிக மாத விற்பனை என்ற சாதனையை ஸ்கோடா படைத்துள்ளது