• Download mobile app
22 Nov 2024, FridayEdition - 3208
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாஜகவின் 54 சட்டமன்ற வேட்பாளர்கள் பட்டியல் ரெடி

March 26, 2016 வெங்கி சதீஷ்

டெல்லியில் நேற்று பாரதிய ஜனதா கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 54 வேட்பாளர்கள் அடங்கிய முதல்கட்ட பட்டியலை மத்திய அமைச்சரும் தேர்தல் குழு செயலாளருமான ஜே.பி.நட்டா வெளியிட்டார்.

அதில் தமிழிசை போட்டியிடும் தொகுதி அறிவிக்கப்படாதது குறித்து கேட்டபோது, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடும் தொகுதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரித்துள்ளார். மேலும், சென்னை தியாகராய நகர் தொகுதியில் ஹெச். ராஜாவும், கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசனும் போட்டியிட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 54 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் விவரம்.

1. கும்மிடிப்பூண்டி- எம்.பாஸ்கர்
2. திருத்தணி- எம்.சக்கரவர்த்தி
3. ஆவடி- ஜே.லோகநாதன்
4. பெரம்பூர்- பிரகாஷ்
5. சைதாப்பேட்டை- காளிதாஸ்
6. தியாகராயநகர்- எச்.ராஜா
7. காஞ்சீபுரம்- டி. வாசன்
8. ஆம்பூர்- வெங்கடேசன்
9. ஓசூர்- ஜி.பாலகிருஷ்ணன்
10. தளி- பி.ராமச்சந்திரன்
11. பென்னாகரம்- கே.பி.கந்தசாமி
12. செய்யாறு- பி.பாஸ்கரன்
13. செஞ்சி- எம்.எஸ்.ராஜேந்திரன்
14. விழுப்புரம்-ஆர். ஜெயக்குமார்
15. கெங்கவல்லி-சிவகாமி பரமசிவம்
16. சேலம் தெற்கு-அண்ணாதுரை
17. திருச்செங்கோடு-நாகராஜன்
18. ஈரோடு கிழக்கு-பி.ராஜேஷ்குமார்
19. ஈரோடு மேற்கு-என்.பி.பழனிச்சாமி
20. காங்கேயம்- உஷாதேவி
21. பவானி- சித்திவிநாயகம்
22. பவானிசாகர்(தனி)-என்.ஆர்.பழனிச்சாமி
23. உதகமண்டலம்-ஜெ.ராமன்
24. திருப்பூர் வடக்கு-சின்னச்சாமி
25. திருப்பூர் தெற்கு-பாயிண்ட் மணி
26. சூலூர்-மோகன் மந்திராசலம்
27. கோவை தெற்கு-வானதி சீனிவாசன்
28. சிங்காநல்லூர்-சி.ஆர்.நந்தகுமார்
29. ஒட்டன்சத்திரம்-எஸ்.கே.பழனிச்சாமி
30. கரூர்- கே.சிவசாமி
31. திருச்சி கிழக்கு-
32. நாகப்பட்டினம்-நேதாஜி
33. வேதாரண்யம் -வேதரத்தினம்
34. கும்பகோணம் -அண்ணாமலை
35. பட்டுக்கோட்டை -கருப்பு முருகானந்தம்

36. பேராவூரணி -ஆர்.இளங்கோ
37. மானாமதுரை (தனி) -எம்.ராஜேந்திரன்
38. மதுரை கிழக்கு -எம்.சுசீந்திரன்
39. சோழவந்தான் (தனி) -எஸ்.பழனிவேல்சாமி
40. திருமங்கலம் -வி.ஆர்.ராமமூர்த்தி
41. போடிநாயக்கனூர் -வி.வெங்கடேசுவரன்
42. சாத்தூர் -பி.ஞானபண்டிதன்
43. விருதுநகர்- சி.காமாட்சி.
44. பரமக்குடி (தனி)-பொன்.பாலகணபதி.
45. விளாத்திக்குளம்-பி.ராமமூர்த்தி.
46. தூத்துக்குடி-எம்.ஆர்.கனகராஜ்.
47. ஒட்டப்பிடாரம் (தனி)-ஏ.சந்தனகுமார்.
48. கடையநல்லூர்-கதிர்வேல்
49. கன்னியாகுமரி-எம்.மீனாதேவ்.
50. நாகர்கோவில்-எம்.ஆர்.காந்தி.
51. குளச்சல்- பி.ரமேஷ்.
52. பத்மநாபபுரம்-எஸ்.ஷீபா பிரசாத்.
53. விளவங்கோடு-சி.தர்மராஜ்.
54. கிள்ளியூர்-பொன்.விஜயராகவன்.
ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதில் பலரும் தேர்தல் காலத்திற்கு புதியவர்கள் என்பதால் வேட்பாளர் பட்டியிலில் மாற்றம் இருக்கலாம் எனவும் அல்லது கூட்டணி அமையும் பட்சத்தில் மாற்றப்படலாம் எனவும் தெரியவருகிறது. இதில் கரூர், சேலம் உள்ளிட்ட பல பகுதியைச் சேர்ந்த வேட்பாளர்கள் தற்போதே இணையத்தளங்கள் மூலம் தங்களது பிரச்சாரத்தை துவங்கியுள்ளனர். குறிப்பாக தங்களது பயோடேட்டா முழுவதையும் இணைத்து நாங்கள் புதியவர்கள் புதியவர்களுக்கு வாய்ப்பளியுங்கள் என கேட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க