June 19, 2017 தண்டோரா குழு
தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான பாஜக ஆட்சிமன்றகுழு கூட்டம் இன்று கூடியது. இக்கூட்டத்தில் தே.ஜ. கூட்டணி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டது.
அதன்படி, தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் ராம்நாத் கோவிந்த் போட்டியிட உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் ராம்நாத் கோவிந்த் பீகார் மாநில ஆளுநராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த ராம்நாத் கோவிந்த் யார்?
*உ.பி. மாநிலத்தைச் சேர்ந்தவர்.
*பீகார் ஆளுநர்.
*வழக்கறிஞர்
*இரண்டு முறை எம்.பி.யாக இருந்தவர்.
*பாஜகவின் தலித் பிரிவு தலைவராக இருந்தவர்.