• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாஜக, தனது பண பலத்தாலும், அதிகாரத்தாலும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது – இரோம் சர்மிளா

March 14, 2017 தண்டோரா குழு

“பாஜக தனது பண பலத்தாலும், அதிகாரத்தாலும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது” என்று சமூக ஆர்வலர் இரோம் ஷர்மிளா கூறியுள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த இரோம் சர்மிளா விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “மணிப்பூரில் ஆட்சியமைக்க உள்ள பாஜக, தனது பண பலத்தாலும், அதிகாரத்தாலும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது என்பதை மாநில மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும், தேர்தலில் ஏற்பட்ட தோல்வியின் காரணமாக ஏற்பட்ட வேதனையில் இருந்து மீள, சொந்த மாநிலத்தை விட்டு சிறிது காலம் விலகியிருக்க விரும்புகிறேன்” என்றார்.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடியில் உள்ள தியான மையத்தில் சில நாட்கள் தங்கியிருக்கத் திட்டமிட்டுள்ளேன் என்றார் அவர். இதற்காகச் செவ்வாயன்று மணிப்பூரிலிருந்து விமானம் மூலம் கோவை வந்த அவர், அங்கிருந்து சாலை வழியாக அட்டப்பாடி சென்றுள்ளார்.

இரோம் சர்மிளா மணிப்பூரில் அமலில் உள்ள ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை எதிர்த்து 16 ஆண்டுகளாக உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவருக்கு வலுக்கட்டாயமாக மூக்கு வழியாக திரவம் செலுத்தப்பட்டு வந்தது. எனினும், பிடிவாதமாக அவர் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார்.

தேர்தலில் போட்டியிட்டு ஜனநாயகப் பாதையில் ஈடுபடுவதற்காக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டார்.அதையடுத்து, புதிய அரசியல் கட்சியைத் தொடங்கிய இரோம் ஷர்மிளா, நடந்து முடிந்த மணிப்பூர் சட்டப் பேரவைத் தேர்தலில் தொடர்ந்து 3 முறை முதல்வராக இருந்த இபோபி சிங்கை எதிர்த்து, தெளபால் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், தேர்தலில் தோல்வி அடைந்தார். மாநில மக்களுக்காகத் தொடர்ந்து 16 ஆண்டு காலம் உண்ணாவிரதம் இருந்த இரோம் ஷர்மிளாவுக்கு 87 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. இது நாடு முழுவதும் பல தரப்பட்டவர்களுக்கு அதிர்ச்சியும் வருத்தமும் தந்தது.

மேலும் படிக்க