• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாதாள சாக்கடை அடைப்புகளை சீர் செய்ய ரோபோக்களை அதிகரிக்க முடிவு

February 8, 2023 தண்டோரா குழு

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை அடைப்புகளை சரிசெய்யும் பணியில் தற்போது 6 ரோபோக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதனிடையே கூடுதலாக 5 ரோபோக்களை வாங்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 600 கிமீ தூரத்துக்கு மேல் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பாதாள சாக்கடை அடைப்புகளை சரி செய்யவும், மனிதக் கழிவுகளை அகற்றவும் தனியார் நிறுவனத்தினரால் ரோபோ இயந்திரம் தயாரிக்கப்பட்டன. கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் ரூ.36 லட்சம் மதிப்புள்ள முதல் ரோபோ இயந்திரம் தனியார் நிறுவனத்தினரால் கொள்முதல் செய்யப்பட்டு, கோவை மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.

கோவை உப்பிலிபாளையம் சிக்னல் அருகே பாதாள சாக்கடை அடைப்புகளை சரிசெய்ய இந்த ரோபோ இயந்திரம் முதல்முறையாக பயன்படுத்தப்பட்டது. இதனிடையே பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில் ரூ. 2.12 கோடியில் பாதாள சாக்கடை கழிவுகளை அகற்றுவதற்காக 5 நவீன ரோபோக்கள் மாநகராட்சிக்கு வழங்கப்பட்டன. தற்போது இந்த ரோபோக்கள் அனைத்தும் தங்களது பணிகளை துவங்கி சிறப்பாக செய்து வருகின்றன. இதனிடையே கூடுதலாக தேவைக்கு ஏற்ப ரோபோக்களை வாங்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

அன்மையில் கோவை வந்திருந்த மத்திய சமூக நலத்துறை இணை அமைச்சர் நாராயணசாமி கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகில் ரோபோ மூலம் பாதாள சாக்கடைகளை சரி செய்யும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் வியந்து கோவை மாநகராட்சி நிர்வாகத்தை பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,

‘‘பாதாள சாக்கடை அடைப்புகளை எதிர்பார்த்த அளவு ரோபோக்கள் சுத்தம் செய்து வருகின்றன. மேலும் மழைக்காலங்களில் இந்த ரோபோக்களால் மிகவும் எளிதாக சாக்கடைகளை சுத்தம் செய்ய முடிகிறது. எனவே கூடுதலாக மண்டத்திலத்திற்கு 1 ரோபோ என 5 ரோபோக்கள் வாங்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது’’ என்றார்.

மேலும் படிக்க