• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாதுகாப்பில் ஸ்டார் ரேட்டிங் பெற்ற ஸ்கோடா ஸ்லேவியா க்ராஷ் !

April 5, 2023 தண்டோரா குழு

ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் க்ராஷ் தர மதிப்பீடு தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கிறது. ஸ்கோடாஸ்லேவியா செடான் குளோபல் புது கார் பகுப்பாய்வு திட்டத்தின் கீழ் (குளோபல் என்சிஏபி)சமீபத்தில் நடைபெற்ற க்ராஷ் பரிசோதனைகளில் 5க்கு 5 நட்சத்திர மதிப்பெண்களை முழுமையாகப்பெற்றது.

மேலும் இதுவரை நடைபெற்ற குளோபல் என்சிஏபி பரிசோதனைகளில் ஸ்லேவியா செடானுக்கே அதிகப் பாதுகாப்பான காராகச் சான்றளித்துள்ளது. இதன் காரணமாக ஸ்கோடாஆட்டோ இந்தியாவை குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் பாதுகாப்பான பயணத்துக்கான க்ராஷ் பரிசோதனைகளில் 5 நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஒரே தயாரிப்பாளர் என்ற பெருமையையும் வழங்கி உள்ளது.

ஸ்லேவியா அமைத்துள்ள பாதுகாப்புத் தரக் கட்டுப்பாடுகள் குறித்துஸ்கோடா ஆட்டோ இந்தியா பிராண்ட் இயக்குனர் பீட்டர் ஸோல்க் கூறுகையில்,

‘ஸ்கோடாவின் உபாயங்களின் ஓர் அங்கமாக எங்கள் நுகர்வோரின் பாதுகாப்பில் நாங்கள் எந்தச் சமரசமும் செய்து கொள்வதில்லை. எங்களது இரண்டாவது இந்தியா 2.0 கார் – ஸ்லேவியாவுக்குகுளோபல் என்சிஏபி பாதுகாப்புப் பரிசோதனையில் 5 நட்சத்திர மதிப்பெண் கிடைத்துள்ளதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.பாதுகாப்பு, குடும்பம், மனித நேயம் உள்ளிட்ட எங்கள் பிராண்ட்விழுமியங்களுக்கு இது துல்லியமாகப் பொருந்தும். எங்கள் ஸ்கோடா கார்களை வாங்க முடிவுசெய்த எங்கள் வாடிக்கையாளர்களை நாங்கள் மனமாரப் பாராட்டுகிறோம்.

அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பான கார்களை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். பாதுகாப்பில் விரிவான அணுகுமுறையுடன், எங்களிடம் முழுமையாகப் பரிசோதிக்கப்பட்ட 5 நட்சத்திர மதிப்பெண் பெற்ற பாதுகாப்பான் கார்கள் உள்ளன. கார்களின் தரம், நீடித்த உழைப்பு மற்றும் பாதுகாப்பில் நாங்கள் எப்போது கவனம் செலுத்துகிறோம் என்பதற்கு இதுவே சான்றாகும். எங்களது உபாயங்களில் பாதுகாப்பு முக்கிய அங்கம் வகிப்பதால்இந்த தத்துவத்தின் அடிப்படையில் தொடர்ந்து கார்களைத் தயாரிப்போம்’ என்றார்.

ஸ்கோடாவின் அசத்தல் ஓட்டும் பண்புகள், பாதுகாப்பில் சமரசம் இல்லை ஆகியவற்றைஇலக்காக் கொண்டும், உள்ளூர் தயாரிப்பு, செலவு மற்றும் பராமரிப்பு குறைவு ஆகியவற்றைக்கவனத்தில் கொண்டும் ஸ்லேவியா வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வகையான உட்புறத் தாக்கங்களுக்காகவும்பரிசோதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பை மனத்தில் கொண்டே ஸ்லேவியா வடிவமைக்கப்பட்டுள்ளது.இதன் கூடு கட்டமைப்பு லேசர் வெல்டிங்கினால் ஆனது. அதிக வலிமை கொண்ட எஃகு கட்டமைப்புகாரணமாக விபத்தின் போது, தாக்கத்தைக் காரின் வெளிப்புறக் கூடு தாங்கிக் கொள்வதால்,உட்புற கேபினில் தாக்கம் குறைவாகவே இருக்கும்.

ஸ்லேவியா உறுதியான மற்றும் தாக்கங்களைத்தாங்கி ஈர்த்துக் கொள்ளும் வகையில், அதி நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய கட்டமைப்பைக்கொண்டதால், உள்ளும் புறமுமாக முழுமையான பாதுகாப்பைக் கொண்ட கார் இதுவே ஆகும். 6 ஏர்பேக், மின்னணு நிலைத்தன்மைக் கட்டுப்பாடு, மல்டி கொலிஷன் பிரேக்கிங்க்,டிராக்ஷன் கண்ட்ரோல், ஆண்டி-லாக் பிரேக், குழந்தைகள் இருக்கைகளுக்கான ஐஸோ ஃபிக்ஸ் மவுண்ட்ஸ், டாப் டீத்தர் ஆங்கர் பாயிண்ட்ஸ், ரெயின் சென்சிங்க் வைப்பர்ஸ், ஆட்டோமேடிக் ஹெட்லைட்ஸ்,டயர் அழுத்த கண்காணிப்புக் கருவி உள்ளிட்ட பல அம்சங்கள் ஸ்லேவியாவில் பொருத்தப்பட்டுள்ளன.

பெரியவர்களின் பயண வசதிகளில் 34இல் 29.71 மதிப்பெண்களையும் கூடுதலாக 5 நட்சத்திரஅந்தஸ்தைப் பெற்றது. குழந்தைகளின் பயண வசதிகளில் 49இல் 42 மதிப்பெண்களுடன் 5 நட்சத்திரஅந்தஸ்தைப் பெற்றது. இவற்றின் மூலம் இதுவரை நடைபெற்ற குளோபல் என்சிஏபி புதிய மற்றும்கடுமையான தரக் கட்டுப்பாடு பரிசோதனைகளிலேயே, அதிகப் பாதுகாப்பான காராக ஸ்கோடா ஸ்லேவியாதேர்வாகி உள்ளது.

மேலும் படிக்க