April 19, 2017 தண்டோரா குழு
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டை மீண்டும் விசாரிக்க சி.பி.ஜ.க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் ரேபர்லி நீதிமன்றத்தால் அத்வானி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டனர். இதனை அலகாபாத் உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. இதனை எதிர்த்து சி.பி.ஐ. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
விசாரணையில் உச்ச நீதிமன்றம் கூறியதாவது;
“ பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டை மீண்டும் விசாரிக்க வேண்டும். இந்த விசாரணை தினந்தோறும் நடைபெற வேண்டும். விசாரணையை 2 வருடங்களுக்குள் முடிக்க வேண்டும்,” என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் இவ்வழக்கில் இருந்து கல்யாண் சிங் விடுவிக்கப்படுவதாகவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.