• Download mobile app
28 Nov 2024, ThursdayEdition - 3214
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாம்பிடமிருந்து குழந்தைகளை காப்பாற்றிய நாய்கள்

August 23, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவில் பாம்பிடமிருந்து சிறுவர்களை இரண்டு நாய்கள் காப்பாற்றியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் சிந்தியா என்பவர் அவருடைய கணவர் டேனியல் மற்றும் தாயார் மெலிசாவுடன் வாழ்ந்து வருகிறார்.டேனியல் சிந்தியா தம்பதியினருக்கு 4 வயதில் ஜேடன் மற்றும் ஒரு வயதில் மல்லோரி என்ற இரண்டு குழந்தைகள் உண்டு.அவர்கள் வீட்டில் பிட்புல் இனத்தை சேர்ந்த பாகோ மற்றும் சிலேயர் நாய்களை வளர்த்து வருகின்றனர்.

அந்த சிறுவர்கள் வீட்டின் முன் இருந்த புல் தரையில் விளையாடிக் கொண்டிருந்தனர்.அப்போது திடீரென அந்த இரண்டு நாய்கள் குறைக்க ஆரம்பித்தன. நாய்கள் குறைக்கும் சத்தம் கேட்ட, டேனியல் வெளியே வந்து, நாய்களை அமைதியாக இருக்கும்படி கூறியும், அவைகள் தொடர்ந்து குறைத்துக்கொண்டே இருந்தன.

இதனையடுத்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை டேனியல் உள்ளே அழைத்து சென்றுவிட்டர்.சிறிது நேரம் கழித்து, ஏன் நாய்கள் ஓயாமல் குறைக்கின்றன என்று அறிந்துக்கொள்ள, வெளியே வந்து பார்த்த போது நாய்கள் பாம்புடன் சண்டைப்போட்டு கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அந்த சண்டையின்போது, இரண்டு நாய்களையும் அந்த பாம்பு கொத்தியது. ஆனாலும் விடாமல் சண்டையிட்டு, அதை கொன்றுவிட்டது.உடனே அந்த இரண்டு நாய்களையும் கால்நடை மருத்துவரிடம் அழைத்து சென்று அந்த நாய்களை காப்பற்றினர்.

“என்னுடைய பேர குழந்தைகள் உயிரை காப்பாற்றிய பாகோ மற்றும் சிலேயருக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை” என்று மெலிசா தெரிவித்தார்.

மேலும் படிக்க