June 26, 2023
தண்டோரா குழு
பாரதிய ஜனதா அமைப்புச்சாரா தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள செல்வி ஹாலில் நடைபெற்றது. இதில் பாண்டித்துரை தலைமை வகித்தார்.
மேலும் இதில் நிர்வாகிகள் ராஜேந்திர பிரசாத், மயில்சாமி, புவனேஸ்வரன், சுப்பிரமணி உட்பட மாநில மாவட்ட மற்றும் பதிவு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் மாநில செயற்குழு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி அமைப்புசார பெண் தொழிலாளர்களுக்கு முறையான வேலை நேரம்,பாதுகாப்பு வழங்கிட வேண்டும், பிரதமரின் இலவச வீடுகள் திட்டத்தின் கீழ் இத்தொழிலாளர்களுக்கு வீடு தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், தனியார் கல்வி நிறுவனங்களில் ஏழை மாணவர்களுக்கு 25% வாய்ப்பு வழங்கிட வேண்டும், இத்தொழிலாளர்களுக்கு வேலைக்கு சென்று வர இலவச பேருந்து பயணச்சலுகை வழங்க வேண்டும், பதிவு பெற்ற பெண் தொழிலாளர்கள், விதவை தொழிலாளர்களுக்கு உதவி தொகை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.