January 22, 2025 தண்டோரா குழு
ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் கைலாக், அதன் முதல் சப்-4எம் எஸ்யூவி, பாரத் என்சிஏபி-இல் (புதிய கார் பகுப்பாய்வுத் திட்டம்) பெருமைமிக்க 5-ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளது குஷாக் மற்றும் ஸ்லாவியாவால் நிறுவப்பட்ட பாதுகாப்புச் சிறப்புப் பிராண்டின் பாரம்பரியத்தைத் தொடரும் வகையில், பாரத் என்சிஏபி சோதனையில் பங்கேற்ற முதல் ஸ்கோடா வாகனமாக கைலாக் திகழ்கிறது.
ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் 2.0 கார்கள் இரண்டுமே, பெரியவர்கள் மற்றும் குழந்தைப் பயணிகளின் பாதுகாப்பிற்காகச் சம்மந்தப்பட்ட குளோபல் என்சிஏபி க்ராஷ் சோதனைகளில் 5-ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீடுகளை பெற்றுள்ளன.
ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் பிராண்ட் இயக்குனர் பெட்ர் ஜானேபா கூறுகையில்,
‘ஸ்கோடா டிஎன்ஏவில் பாதுகாப்பு என்பது உள்ளார்ந்த அம்சமாக விளங்குகிறது. மேலும் 2008 முதல் ஒவ்வொரு ஸ்கோடா காரும் உலகளவில் க்ராஷ் சோதனை செய்யப்பட்டு வருவதுடன், இந்தியாவில் 5-ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீட்டையும் கொண்டுள்ளது. 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பிடப்பட்ட கார்களுடன், ஸ்கோடா ஆட்டோ இந்தியா கார் பாதுகாப்பு குறித்த பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது.
உலகளாவிய என்சிஏபி சோதனைகளின் கீழ் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு முழு 5 நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்ற முதல் பிராண்ட் எங்களுடையது. இப்போது எங்கள் புதிய சப்-4 மீட்டர் எஸ்யூவியான கைலாக், பாரத் என்சிஏபி சோதனையில் சம்மந்தப்பட்ட பிரிவின் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஆறு ஏர்பேக்குகள் உட்பட பரந்த அளவிலான ஆக்டிவ் மற்றும் பேசிவ் பாதுகாப்பு அம்சங்களைத் உள்ளடக்கிய விரிவான பாதுகாப்பு அமைப்புகளுடன் கைலாக் வருகிறது.
மீண்டும் க்ராஷ் மேலாண்மை அமைப்புடன் கூடிய ஹாட்-ஸ்டாம்ப் முத்திரையிடப்பட்ட எஃகு பயன்பாடு, கைலாக் வாகனத்தின் மிகச் சிறந்த பாதுகாப்பை உறுதி செய்கிறது. இந்த மதிப்பீடு இந்திய சாலைகளில் ஐரோப்பிய தொழில்நுட்பத்தை ஜனநாயகப்படுத்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டிற்கான கூடுதல் சான்றாகும், ஒரு கார் கட்டமைக்கப்பட வேண்டிய அடித்தளங்களில் ஒன்றான பாதுகாப்பை உள்ளடக்கியதாகும்‘ என்றார்.
ஸ்கோடா கைலாக், பயணிகள் பாதுகாப்புக்கான பிராண்டின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது. இது அனைத்து வகைகளிலும் 25 க்கும் மேற்பட்ட ஆக்டிவ் மற்றும் பேசிவ் பாதுகாப்பு தொழில்நுட்பங்களை தரமாகக் கொண்டுள்ளது.வலுவான எம்க்யூபி-ஏஓ-ஐஎன் இயங்குதளத்தில் வடிவமைக்கப்பட்ட கைலாக், இந்திய சாலைகள் மற்றும் ஓட்டுநர் நிலைமைகளுக்கு ஏற்ப மேம்பட்ட பொறியியல் மற்றும் புதுமையான அம்சங்களை ஒருங்கிணைக்கிறது.
6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ரோல் ஓவர் ப்ரொடெக்ஷன், ஹில் ஹோல்ட் கண்ட்ரோல், மல்டி-கொலிஷன் பிரேக்கிங் மற்றும் எக்ஸ்டிஎஸ்+ ஆகியவை அடிப்படை வேரியண்ட்டிலிருந்து தரநிலையாக சேர்க்கப்பட்டுள்ளன. ஹாட் ஸ்டாம்ப்ட் எஃகு கட்டுமானம் மற்றும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட விபத்து மேலாண்மை அமைப்பு அகியவை கேபின் பாதுகாப்பையும், விபத்து பின்னடைவையும் மேலும் மேம்படுத்துகிறது. இது அதன் பாதுகாப்பே முதல் என்னும் அணுகுமுறையை வலுப்படுத்துகிறது.