January 26, 2025 தண்டோரா குழு
கோவை உடையாம்பாளையம் பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் சார்பில் இந்திய தேசத்தின் 76-வது குடியரசு தின விழா உடையாம்பாளையம் பாரத மாதா திடலில் நடைபெற்றது.
பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் M. கெளரி சங்கர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கோவை மசக்காளிபாளையம் மாஸ்டர் சிலம்பம் நிறுவனர் ஆனந்தன் அவர்கள் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார்.
செளரிபாளையம் மகாகவி பாரதி அம்மன்அடிமை அரசு பொது நூலகத்தின் நூலகர் இலட்சுமண சாமி இந்திய தேசத்தின் விடுதலைக்காக உழைத்த தேசத்தலைவர்களுக்கும்,பாரத மாதாவிற்கும்,மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக பகவத்கீதை -குர்ஆன்-பைபிள் உள்ளிட்ட மும்மதங்களின் வழிபாட்டு புத்தகங்களுக்கும் வழிபாடு செய்து வணங்கினார்.
கோவை பாலாஜி ஆட்டோஸ் நிறுவனரும், சமூக சேவகருமான R.சதிஸ் கலந்து கொண்டு தேசியக்கொடி ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.சமூக சேவகர்கள் பாலசுப்பிரமணியம்,V.ஜோதிபாசு, காளிமுத்து ,நூலகர் பிரபு உள்ளிட்டோர் இந்திய தேசத்தின் ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக சமாதான புறாக்களை பறக்க விட்டு விழாவை சிறப்பித்தார்கள்.
விழாவின் சிறப்பு விருந்தினர்கள் R.சதிஸ் , V.ஜோதிபாசு ஆனந்தன் அவர்களுக்கு மனித நேய பண்பாளர் விருது நல்வழி காட்டி விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர். இலட்சிய துளி மக்கள் அமைப்பின் நிறுவனர் தினேஷ்குமார் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள்,எழுது பொருட்கள், இனிப்பு, சாக்லேட் மற்றும் கார வகைகள், பிஸ்கட் பாக்கெட்டுகள் வழங்கி விழா சிறப்புரையாற்றினார்.
சமூக சேவகர்கள் சக்திவேல், ஆட்டோ குயின், திவ்யா சக்திவேல், வரலட்சுமி உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்ட பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் அறுசுவை அன்னதான உணவை வழங்கி அனைவரின் பசியை போக்கினார்கள்.
மேலும் கோவைமாநகர காவல்துறை , உயிர் அமைப்புடன் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியும், தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணியும்,கோவை மாவட்ட நூலக ஆணைக்குழு செளரிபாளையம் மகாகவி பாரதி அம்மன்அடிமை அரசு பொது நூலக வாசகர் வட்டத்துடன் இணைந்து வாசிப்பை நேசிப்போம் புத்தக விழிப்புணர்வு பேரணி மாஸ்டர் சிலம்பம் மாணவர்களின் சிலம்ப கலைநிகழ்ச்சிகள் உடன் எழுச்சியுடன் விழிப்புணர்வு பேரணியானது செளரிபாளையம் உடையாம்பாளையம் பகுதி முழுக்க வலம் வந்து எழுச்சியோடு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் காந்தி நகர் நாகராஜ், சரவணன், சுஜன், பாரதி, மதன், மணி,ராக்கேஷ்,M.G.கன்ஷிகா,M.G.மோஹிதா ஸ்ரீ மற்றும் இலட்சிய துளி ரஞ்சித்,ரெக்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்து வழிநடத்தினார்கள்.