September 16, 2021 தண்டோரா குழு
கேப்ஸ் கோல்டு நிறுவனத்தின் ஒரு அங்கமான கலாஷா பைன் ஜூவல்ஸ் சார்பில் மூன்று நாள் சிறப்பு தங்க நகை கண்காட்சி மற்றும் விற்பனை கோவையில் இன்று துவங்கியது.
இந்தக் கண்காட்சி இன்று முதல் வரும் செப்டம்பர் 18ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
வடிவமைப்பாளர் அபர்ணா சுங்குவால் வடிவமைக்கப்பட்ட தென்னிந்தியாவின் மிகவும் பழமைவாய்ந்த தங்க நகைகள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவுள்ளன. அதேபோல அவரால் தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருட்களும் இதில் அடங்கும்.
அழகான வடிவமைப்புடன் கூடிய தங்கம், வைரம், ஜடாவ் மற்றும் வெள்ளி நகைகள் காட்சிப்படுத்தப்படும். மணப்பெண்ணுக்கென பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட பட்டை தீட்டப்பட்ட வைரத்தில ஜெம்ஸ் ஸ்டோன் பதிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.
இக்கண்காட்சி பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் நடத்தப்படுகிறது. இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட பணியாளர்கள், கோவிட்-19 தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி பணியமர்த்தப்பட்டுள்ளனர். பார்வையாளர்களின் பாதுகாப்புக்கும், வசதிக்கும் அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்படுகின்றன. தவிர இரவு உணவும் வழங்கப்படுகிறது.
இதன் துவக்க விழா இன்று நடைபெற்றது. சூப்பர் பிரிடிங் பார்ம் இயக்குனர் கவிதா பழனிசாமி, திருமதி. இன்டியா யுனிவர்ஸ் எர்த் மற்றும் அம்மா சேவை அறக்கட்டளை நிறுவனர் சோனாலி பிரதீப், ஆப்காம்ப் விட்கெட்ஸ் பிரைவேட் லிமிடெட், இயக்குனர் பிரீத்திகா பாலாஜி மற்றும் பாரஸ் அப்பாரல்ஸ், இயக்குனர், பல்குனி படானி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
துவக்க விழாவில் பேசிய கலாஷாவின் இயக்குனர் அபிஷேக் சந்தா,
“கண்காட்சியைக் காண வருவோருக்கு விருந்தாக இது அமையும். நகைகளை வாங்கி மகிழும் வாடிக்கையாளர்களுக்கு அவற்றை அணியும்போது கம்பீரமான உணர்வு எப்போதும் கிடைக்கும். பாரம்பரிய இந்திய கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளின் அடிப்படையில் ஒவ்வொரு நகையும் மிகுந்த கவனத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. பெரிதுபடுத்தப்பட்ட அழகிய வடிவமைப்பு கலெக்சன்கள் மகளிருக்கு அழகு சேர்ப்பதுடன் பெருமித உணர்வையும் அளிக்கும்” என்றார்.
பாரம்பரியமிக்க கலாஷா பைன் ஜூவல்ஸ் கண்காட்சி குறித்து ஓர் சிறிய குறிப்பு:
கலாஷா என்றாலே பழமையும் அதோடு அழகும் கலந்த அதிநவீன காலத்துக்கு ஏற்ற தனிப்பட்ட வகைகளுக்கு பெயர் பெற்ற நகைகளாக திகழ்கிறது. கலை மற்றும் கலாச்சாரம், நகை உற்பத்திக்கென தனி பாரம்பரியக்கது. தனித்துவமிக்க கைகளால் வினையப்பட்ட நகைகளுக்கு பெயர் பெற்றது. தனித்தன்மையோடு பல்வேறு வகைகளைக் கொண்டது. கலாஷாவின் இயக்குனர் அபிஷேக் சந்தா மற்றும் சந்தா ஸ்ரீனிவாஸ், இந்த கண்காட்சியை எவ்வித லாபநோக்கமும் இல்லாமல், நேர்த்தியான அருமையான நிகழ்வாக மாற்ற மிக முக்கிய பங்குவகிக்கிறார்கள்.
ஒவ்வொரு நாளும் விதவிதமாக அணிவதற்கு ஏற்ற நகைகள் முதல் மணப்பெண் அலங்காரத்துக்கு சிறப்புமிக்க நகைகள் வரை, விழாக்கால நகைகள் என பல்வேறு வகை நகைகள் அனைத்தும் ஒரே இடத்தில் தேர்வு செய்ய இந்த கண்காட்சி பெரிதும் உதவுகிறது.