November 30, 2022
தண்டோரா குழு
பரத நாட்டியம் என்பது தமிழ்நாட்டிற்குரிய ஒரு மிக சிறந்த நடனமாகும்.பல்லாயிரம் வருடங்களுக்கு முன் தோன்றிய இந்த கலையின் கடவுளாக சிவ பெருமான் இருக்கிறார். இன்றும் பரதம் ஆடும் பலர் முதலில் வணங்குவது நடராஜ பெருமானை தான். இந்தநிலையில் கோவை நவ இந்தியா சாலையில் உள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஸ்ரீ நாட்டிய நிகேதன் நடத்தும் நிறுத்தியா,சந்தியா, பரதநாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்றது.
நடன ஆசிரியர் மிருதுளா ராய் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கண்ணன், முருகன்,சிவன்,சக்தி உள்ளிட்ட கடவுள்கள் பற்றிய நடன நாட்டிய நிகழ்ச்சி இடம்பெற்றன. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ருசி சர்மா, சுஜாதா நாயர், ராம கொண்டின்யா, சுப்ரியா சிங் ராவத் ஆகியோர் கலந்து கொண்டனர். பாரத நாட்டியம் நிகழ்ச்சியில் மாணவிகள் தங்களது திறமையான நடனத்தின் மூலம் பார்வையாளர்கள் அனைவரையும் ஈர்த்தனர்.