March 3, 2016 independent.co.uk
சீனா முழுவதும் தற்போது நாய்க்கறி மிகவும் பிரபலமடைந்து வருகிறது. குறிப்பாக உயர்ஜாதி நாயின் மாமிசம் என்றால் அதிக விலை கொடுத்து வாங்கவும் ஹோட்டல் கடையின் உரிமையாளர்கள் தயாராக உள்ளனர்.
இதனால் சமீபகாலமாக உயர்ரக நாய்கள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சீனாவின் பீஜிங் மாகாணத்தில் ஒரு பார்வையற்றவர் தனது 7 வயதுடைய கருப்புகலர் லேப்ரடா வகை வழிகாட்டி நாயுடன் நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது வேகமாக வந்த வேனில் இருந்த நபர்கள் அந்த நாயைக் கடத்திச்சென்றனர். இதையடுத்து அவரை மற்ற நபர்கள் அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் இது குறித்து மிகவும் கவலையில் இருந்த பார்வையற்றவரான பின்க்போ,
மறுநாள் காலை வீட்டின் கதவை திறந்தபோது அவரது லெப்ரடா வழிகாட்டி நாயான கியோக்கியோ வாசலில் நின்றுகொண்டு அவர்மீது அன்பாகத் தாவியது. அந்த நாய் வந்த சந்தோசத்தில் அதை முழுவதும் தடவிப்பார்த்த போது அதன் கழுத்தில் ஒரு கடிதம் இருந்ததைப் பார்த்துள்ளார்.
அதை எடுத்து வீட்டில் இருந்தவர்களிடம் கொடுத்து படிக்கச் சொன்னபோது அவர்கள் அதில் தெரியாமல் நாய் மாற்றிக் கடத்திவிட்டோம் எனவே மன்னிக்கவும் என எழுதியிருந்ததாகத் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர் கூறும்போது, எனது வழிகாட்டி நாய் என்னை விட்டுச் சென்றபிறகு நான் உணவருந்தவில்லை,
அதே போலத்தான் எனது நாயும் உணவருந்தியிருக்காது எனத் தெரியும் எனத் தெரிவித்தார். மேலும் திருடியவர்கள் நியாயமாக நடந்துகொண்டதால் தான் தனக்கு மீண்டும் வழிகாட்டி நாய் கிடைத்தது என பெருமிதப்பட்டுக்கொண்டார்.