November 28, 2022 தண்டோரா குழு
கோவை ஜீவன் ஜோதி பயிற்சி மையத்தில் பாலின நீதிக்கான சமூகத் தடைகளை நீக்குவதற்கான 2 நாள் பயிற்சி முகாம் இன்று (28ஆம் தேதி) தொடங்கியது.
காரமடை குட் ஷெப்பர்ட் தொண்டு நிறுவனம் சார்பில் கோவை ஜீவன் ஜோதி பயிற்சி மையத்தில் பாலின நீதிக்கான சமூகத் தடைகளை நீக்குவதற்கானஇரண்டு நாள் பயிற்சி முகாம் (இன்று) திங்கள்கிழமை தொடங்கியது. இந்த பயிற்சி முகாமை கோவை மகளிர் திட்ட துணை இயக்குனர் ஜோதி கிருத்திகா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
விழாவிற்கு வளர்ச்சி திட்ட பணிகள் ஆலோசகர் ராஜரத்தினம் தலைமை தாங்கினார்.விழாவில் கோவை தந்தை ஜியோ பிரான்சிஸ் புரக் கிரியேட்டர் சிறப்புரை ஆற்றினார். வருகிற 29-ந்தேதி முடிய 2 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சி முகாமில் தமிழ்நாடு முழுவதும் 20 மாவட்டங்களில் இருந்து 75க்கும் மேற்பட்ட தொண்டுநிறுவன பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இந்த பயிற்சி முகாமில் சென்னை சி.சி.ஆர். டி.முதன்மை ஒருங்கிணைப்பாளர் கே. கிருஷ்ணவேணிகலந்து கொண்டுஅனைவருக்கும் பயிற்சி அளித்தார்.முன்னதாக விழாவுக்கு வந்திருந்த அனைவரையும் சகோ.தீப்தி (குட் செப்பர்டு தொண்டு நிறுவனம் திட்ட இயக்குனர்) வரவேற்று பேசினார்.முடிவில் ஒருங்கிணைப்பாளர் எலிசபெத் நின்றியுரையாற்றினார்