May 26, 2017 தண்டோரா குழு
இந்தியாவில் பா.ஜ.க. அரசு பதவியேற்று 3 ஆண்டு கால வெற்றியின் நிறைவை முன்னிட்டு, மங்களூர் ஆட்டோ ஓட்டுநர் ஆட்டோ கட்டணத்தை 1 ரூபாய்க்கு குறைத்துள்ளார்.
கர்நாடகா மாநிலத்தின் மங்களூரை சேர்ந்த சதீஷ் பிரபு(44), ஆட்டோ ஓட்டுநர். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர ரசிகரும் கூட. அவர் பதவிக்கு வந்து 3 ஆண்டுகள் நிறைவு பெற்று, நான்காம் ஆண்டு தொடங்கியுள்ளது. இதை கொண்டாடும் வகையில், வெள்ளிக்கிழமை தொடங்கி நான்கு நாட்களுக்கு ஆட்டோ கட்டணத்தை ஒரு ரூபாய்க்கு குறைத்துள்ளார் சதீஷ்.
“பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், பா.ஜ.க அரசு பொறுப்பேற்று 3 ஆண்டுகள் முடிந்து, நான்காம் ஆண்டு தொடங்கும் இந்த நேரத்தில், 5 கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் வாடிக்கையாளர்களுக்கு 1 ரூபாய் கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளேன். நாடெங்கிலும் நரேந்திர மோடி பல நல்ல காரியங்களை செய்து வருகிறார். பிரதமருக்கு நன்றி செலுத்தும் வகையில், என் வாடிக்கையாளர்களுக்கு கட்டணத்தை குறைக்க முடிவு செய்தேன். இதன் மூலம், நடுத்தரவர்க்கம்(middle class) மக்களுக்கு உதவியாகவும், அவர்களுடைய பணம் சேமிக்கவும் படுகிறது.
நான் எந்தவொரு அரசியல் காட்சியிலும் ஈடுப்படவில்லை. மோடியின் மீது நான் கொண்டுள்ள அன்பை, இவ்வாறு வெளிப்படுத்துவது, இது முதல் முறையல்ல. நரேந்திர மோடி, இந்திய பிரதமராக பதவியேற்ற பிறகு, நான் ஆட்டோ கட்டணத்தை குறைத்துக்கொண்டேன். இதனால் 15௦ பேருக்கும் மேலான வாடிக்கையாளர்கள் பயனடைந்துள்ளனர்” என்று தெரிவித்தார்.
பா.ஜ.க கட்சி பொதுச்செயலாளர் சி.டி ரவி கூறுகையில்,
“மோடியின் புகழ் அனைத்து மக்களையும் கடந்து செல்கிறது என்பதற்கு சதீஷ் பிரபுவின் செயல் அமைந்துள்ளது. மோடியின் வளர்ச்சி திட்டங்களையும் அதை செயல்படுத்தும் முறையும் மக்கள் அதிகமாக ஆதரித்து வருகின்றனர்” என்று கூறினார்.