• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் பேராசிரியைக்கு மொபைல் பக்” காப்புரிமை வழங்கல்

March 22, 2022 தண்டோரா குழு

கோயம்புத்தூர் பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் இயற்பியல் துறைப்பேராசிரியை டாக்டர் என். பிரியதர்சினிக்கு “மொபைல் பக்” என்ற பெயரில் காப்புரிமை வழங்கப்பட்டது.

நெட்வொர்க் ஆண்டெனாக்கள் மூலம் தீவிரமாகத் தொடர்பு கொள்ளும் மொபைல் போன்களைக் கண்டறிவதற்காகத் தகவல் தொடர்புத் துறையில் இந்த காப்புரிமை உள்ளது. இந்த கண்டுபிடிப்பின் வழியாக செயலில் உள்ள மொபைல் சிக்னல்களைக் கண்டறிவதற்கான ஒரு தனித்தன்மை உள்ளது.கடந்த பத்தாண்டுகள் வரை, செயலற்ற நிலையில் உள்ள செல்போன் சிக்னல்களைக் கண்டறிய அனைத்து மொபைல் டிடெக்டர்களும் பயன்படுத்தப்பட்டன.

இந்த கண்டுபிடிப்பு, தடைசெய்யப்பட்ட பகுதியில் செயலில் உள்ள மொபைல் போன்களை துல்லியமாகவும் நம்பத்தக்க வகையிலும் செலவு குறைந்த முறையில் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் கண்டறியப் படுவதாகும். இந்த தொழில்நுட்ப கண்டுபிடிப்பின் பின்னணியில் மைக்ரோ கண்ட்ரோலர் மூலம் அனலாக் முதல் டிஜிட்டல் டிரான்ஸ்மிஷனைப் பயன்படுத்தி செல்போனிலுள்ள சிக்னல்களைத் தெளிவாக உணர முடியும்.

இக்கண்டுபிடிப்பின் காப்புரிமை ஜூலை 18 2012 முதல் முன்னுரிமை வழங்கப்பட்டு 20 ஆண்டுகள் செயல்படுத்தப்படும். சமுதாய நோக்கில் இப்புதுமையான கருவியைக் கண்டுபிடித்த டாக்டர் என் பிரியதர்ஷினியின் அரும் முயற்சிக்கு கல்லூரி நிர்வாகம், தலைவர், செயலர், முதல்வர் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினைத் தெரிவித்தனர்.

மேலும் படிக்க