October 7, 2022 தண்டோரா குழு
பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி பைராக் ஈயூவா மையத்தில் ஈயூவா மற்றும் இன்னோவேஷன் பெல்லோஸின் முதல் குழுவின் பணியிட சேர்க்கை நடை பெற்றது.
இதன் தொடர்பாக கல்லூரி செயலாளர் Dr. N. யசோதா தேவி, வரவேற்பு உரையாற்றினார். பேராசிரியர். P. M. முரளி, தலைவர், கவுன்சில் ஆப் ப்ரெசிடெண்ட்ஸ், ஏபில் இந்தியா; தலைவர் – கோல்டன் ஜூப்ளி பையோடெக் பார்க், சென்னை சிறப்புரையாற்றினார். இளைய தலைமுறையினரின் தொழில் தொடங்கும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் பைராகின் முயற்சிகளை பாராட்டினார்.
பைராகின் திட்டங்களை இளைய தலைமுறையினரிடம் சேர்க்கும் மாபெரும் பணியை மேற்கொள்ள தகுதியான கல்லூரி பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி என்று பாராட்டினார்.Dr. மனிஷ் திவான், தலைவர், எஸ். பி. இ. டி. மற்றும் மேக் இன் இந்தியா வசதி உயிரி தொழில்நுட்பத்திற்கான எளிதாக்கல் செல், பைராக், அதிகாரப்பூர்வமாக விழாவை துவக்கிவைத்தார்.
மாணவ மாணவியர், பைராகின் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி நம் நாட்டு மக்களின் தேவைகளை ஆராய்ச்சி மூலம் பூர்த்தி செய்ய வலியுறித்தினார். மேலும் அவர் கல்லூரி தலைவர் மற்றும் செயலாளரை பாராட்டினார்.
Dr. K. சுரேஷ் குமார்,நிர்வாக இயக்குனர், பி எஸ் ஜி ஸ்டேப், பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரி, கோவை, பாராட்டுரை வழங்கினார்.
Dr. P. மீனா, கல்லூரி முதல்வர், பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, நன்றி உரையாற்றினார்.பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, நாட்டின் பத்து பைராக் ஈயூவா மய்யங்களில் ஒன்று. மாணவியரின் தொழில்முனைவு எண்ணங்களை ஊக்குவித்து அவர்களை தொழில் முனைவோர்களாக மாற்றுவதே இந்த மையத்தின் குறிக்கோள். இந்த மையத்தில் ஊக்குவிக்கப்படும் மாணவ மாணவியர், தொழில்துறை உயிரி தொழில்நுட்பம் சார்ந்த துறைகளான கழிவு மதிப்பாக்கம், ஊட்டச்சத்து அறிவியல், உணவு தொழில்நுட்பம், சுகாதார பராமரிப்பு, என்சைமாலஜி மற்றும் உயிரி பிளாஸ்டிக் ஆகிய துறைகளில் கவனம் செலுத்துவர்.
பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி பைராக் ஈயூவா மய்யம், கடந்த ஜூன் மாதம் 8ம் நாள் முனைவர் பி காளிராஜ், பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தரால், கல்லூரி நிறுவனர் Dr. R. நந்தினி முன்னிலையில் துவக்கபட்டது.