April 11, 2023 தண்டோரா குழு
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியத்தின், நிதியுதவியுடன் பி எஸ் ஜி கலை கல்லூரி, சென்டர் பார் இன்னோவேஷன், இன்குபேஷன் மற்றும் என்டர்புரோனர்ஷிப் மற்றும் பிக்கி புளோ இணைந்து நடத்தும் தொழில்நுட்ப அடிப்படையிலான தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் துவக்கம்.பிக்கி புளோ கோயம்புத்தூர் பிரிவு பி எஸ் ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
2013 ஆம் ஆண்டு முதல் இவ்விரு நிறுவனங்களும் இணைந்து பெண்கள் முன்னேற்றம் மற்றும் பெண் தொழில் முனைவோர் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கான கூட்டமைப்பில் பத்து வருடங்களை நிறைவு செய்துள்ளது.பி எஸ் ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் பிக்கி புளோ தொழில்முனைவோர் ஊக்குவிப்பு நடவடிக்கைகளுக்கான தங்கள் பங்களிப்பைத் தொடர்வதற்காக, இன்று கல்லூரி வளாகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. பிக்கி ஃப்ளோ கோயம்புத்தூர் அத்தியாயத்தின் தலைவர் ரமாபிரபா ராஜசேகரன், பிக்கி புளோ, பெண்களை முன்னேற்றி அதிகாரமளிப்பதற்கும் எங்களது சக்தியை பயன்படுத்த உறுதிமொழி எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.பி எஸ் ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி-இன் தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பிரிவு பல ஆண்டுகளாக சமூக உறுப்பினர்கள் மற்றும் மாணவர்களுக்கு இதுபோன்ற தொழில்முனைவோர் பயிற்சித் திட்டங்களை நடத்தி வருகிறது.
மேலும் இதுபோன்ற பயிற்சித் திட்டங்கள் மூலம் வெற்றிகரமான தொழில்முனைவோரை உருவாக்குவதில் முன்னோடியாக இருந்து வருகிறது. எலெக்ட்ரானிக்ஸ்ஃபயோ சயின்ஸ் அல்லது எந்த ஒரு துறையிலும் பிசினஸை சொந்தமாகத் தொடங்க அல்லது ஏற்கனவே உள்ள தொழிலை வளர்க்க விரும்பும் நபர்களுக்கு, பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள பிசினஸ் இன்குபேஷன் மையத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பி எஸ் ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் பிக்கி புளோ, கோயம்புத்தூர் நிறுவனங்கள் இணைந்து பல்வேறு தொழில் பயிற்சி நிகழ்வுகளை நடத்த இருக்கிறது.
மேலும் தகவலுக்கு
E mail: [email protected],
Mobile: 9443760648 என்ற எண்ணை தொடர்பு கொள்ளாம் என்றனர்.